இத்தாலிய யோகா குழுவினர் வருகை

காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு இத்தாலிய யோகா குழுவினர் வருகை தந்தனர். பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.
இத்தாலிய யோகா குழுவினர் வருகை
Published on

மதுரை

இந்தியாவில் பின்பற்றப்படும் யோகா, தியானம், நல வாழ்வு ஆகியவற்றை கற்றுக் கொண்டு இத்தாலிய மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கான பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

இந்த குழுவினர்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தனர். காந்திய சிந்தனைகள் குறித்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். காந்தி நினைவு அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட யோகா குழுவினர் அந்த அருங்காட்சியகத்திற்கும் இத்தாலி நாட்டிற்குமான தொடர்புகள் வருங்காலத்தி லும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த னர்.

இதற்காக காந்திய கலாசார பரிமாற்றம் தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com