என் மலர்
நீங்கள் தேடியது "ராஜாங்கம் அறிக்கை"
- எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி மகத்தான சாதனை படைப்பார்.
- முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி. ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை எளிய மக்களுக்காக அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 1972 ஆம் ஆண்டு தொடங்கினார் .இந்த இயக்கம் ஏழை எளிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி பெற தொடங்கப்பட்டது என்பதால் மக்கள் அனைவரும் தங்களின் ஒட்டு மொத்த ஆதரவை எம்.ஜி.ஆர்.க்கு தந்தனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மதுரை மண்ணில் மகத்தான மாநாட்டை நடத்தி அ.தி.மு.க.வின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். இதன் மூலம் அ.தி.மு.க. இயக்கம் தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க. இயக்கத்தை வலிவோடும் பொலிவோடும் வளர்த்தார்.
மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டையும் நடத்தி மதுரையை அரசியல் தலைநகராக்கினார். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக அ.தி.மு.க. உருவெடுத்தது.
தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் அமர்ந்த இயக்கம் அ.தி.மு.க. ஏழை எளிய மக்களுக்கு மகத்தான திட்டங் களை தந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 3-ம் தலைமுறையாக அ.தி.மு.க. தலைமைக்கு தலைவராகி இருக்கிறார்.
கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப் பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஒட்டு மொத்த தொண்டர்களின் மகத்தான ஆதரவை பெற்று
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் 3-வது மக்கள் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது தலைமையில் அ.தி.மு.க. இயக்கம் தொடர்ந்து மிக வலிமையாக வளர்வதோடு மகத்தான வெற்றியை பெரும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை வரும் அளவுக்கு மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைக்கும்.என்பதை தொண்டர்களின் மகத்தான எழுச்சி மதுரை மாநாட்டில் மூலம் வெளிப்படுத் தப்பட்டுள்ளது.
எனவே அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் தமிழ கத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய நடுத்தர வர்க்கத் தினரின் முகத்திலும் தெரிகிறது.
எனவே இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை இதன் மூலம்
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் எடப்பாடியாரும் மகத்தான சாதனை படைக்க தயாராகிவிட்டார் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






