என் மலர்tooltip icon

    மதுரை

    • உசிலம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக உலக தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன், நிலைய மருத்துவர் டாக்டர் மாதவன், மாவட்ட மனநல மருத்துவர் சந்தோஷ்ராஜ், மனநல உளவியலாளர் அப்துல், சமூகப்பணியாளர் சோனியா, ஜெகன், செவிலியர் பிரசாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளனர்.
    • மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.

    மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை மறித்தார். அப்போது அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். தொடர்ந்து 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் ஷேக் அப்துல்லா விடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் கையில் வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றது.

    இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்பவரிடம் இதே கும்பல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. குற்றவாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

    இதுதொடர்பாக 2 பேரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ேஜாதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை ேதடி வருகின்றனர்.

    மேலூர் 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட கும்பல் நோட்டமிட்டு இதனை செயல்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • போலீஸ்காரர் மீது தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
    • சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் சம்பவத் தன்று சோழவந்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் விதிகளை மீறி பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கூச்ச லிட்டபடி சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து தாக்கியது அம்பலத்தடி கிராமத்தை சேர்ந்த அசோக்கு மார்(வயது21), பிள்ளை யார்நத்தம் கிராமத்தை சேர்ந்த திருச்செந்தில்(20) ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
    • மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,

    திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    • வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் நடந்த கட்சி பிரமுகரின் திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டி வரவேற்கின்றது. சாதி அடிப்படையில் மோதல்களை உருவாக்குவது சங் பரிவார் அமைப்புகள் தான்.

    தமிழகத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பி ராமர் பெயரை சொல்லி சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து ஆதயாயம் தேட முடியாது. எனவே அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவது தான்.

    சாதிப்பெருமையை பேசுவது சங்பரிவார் அமைப்புகள் தான். அம்பேத்கர், பெரியாரை பிடித்தவர்கள் சாதி அரசியலை பேச மாட்டார்கள். சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    இதேபோல் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா போன்றோர் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசி வருகிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும்.

    சனாதன தர்மம் என்பது பிராமணர், ஆரியர்கள் சொல்லும் பெயர். நமது வாழ்வியல் எப்போது தோன்றியது? என யாராலும் சொல்ல முடியாது. வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனு சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சனாதனத்தை வீழ்த்தும்.

    காலை சிற்றுண்டி திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு சங்பரிவார் அமைப்புகள் தூண்டுதலாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இதன் மூலம் தலித் மக்களிடமிருந்து தி.மு.க. அரசை பிரிக்க நினைக்கும் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது.
    • கொள்ளை குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    மதுரை :

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்ரகாளி அம்மன், பாரை கருப்பு அய்யனார் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்த முதல் மரியாதையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகனுக்கும், அதே பகுதி தி.மு.க.வைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு மர்மகும்பல் கற்களை வீசி எரிந்தும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்பலம் தரப்பினரும், வேல்முருகன் தரப்பினரும் மோதிக்கொண்டதில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார், சுப்பையா, சூர்யா, விஜய், வேல்விழி மற்றும் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது. இது குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்று அதிகாலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் டாட்டா ஏஸ் வாகனம் ஆகியவற்றிற்கு மர்மகும்பல் நள்ளிரவில் தீ வைத்துள்ளது. இதில் அந்த வாகனங்கள் கொளுந்து விட்டு எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதால் சம்பவம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நான் பர்மாவில் வாழ்ந்தபோது இந்தியரை திருமணம் செய்து கொண்டேன்.
    • சேலையை பெற்றுக்கொண்ட அவர் எனக்கு இன்று கடவுள் கொடுத்தது இது என்று சிரித்தார்.

    சென்னை அடையார் பகுதியில் 81 வயது நிரம்பிய ஒரு பெண் பிச்சை எடுத்து சாப்பிடுவதையும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையும் பார்த்த ஒருவர் அவருடன் உரையாடிய வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் மெர்லின் (வயது 81). பர்மாவில் உள்ள ரங்கூனில் பிறந்த நான் அங்கு ஆசிரியராக பணியாற்றினேன். குழந்தைகளுக்கு நான் டியூசன் எடுப்பேன். ஆங்கிலம், கணிதம் பாடங்கள் எனக்கு நன்றாக தெரியும். தமிழ் ஓரளவுக்கு தெரியும்.

    நான் பர்மாவில் வாழ்ந்தபோது இந்தியரை திருமணம் செய்து கொண்டேன். கிறிஸ்தவ ஆலயத்தில் தான் எங்களது திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் இருந்தன. ஆனால் இப்போது கணவர் மற்றும் குழந்தைகள் எல்லோரும் இறந்து விட்டனர். ஒருத்தர் கூட இல்லை. இதனால் எனது தேவையை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன்.

    வயிற்றை நிரப்ப வேண்டும் அல்லவா! வேறு வழியில்லையே, அதனால் சென்னை வந்து அடையார் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு எதுவும் தேவை உள்ளதா? என்று அவருடன் உரையாடியவர் கேட்க, எதுவும் எனக்கு வேண்டாம் என்றார். ஒரு சேலை, ஒரு சட்டை மட்டும் தான் என்னிடம் உள்ளது என்று அவர் கூறியபோது உங்களுக்கு ஒரு புதுச்சேலை நான் வாங்கி வந்துள்ளேன். இந்தாருங்கள் என்று அவரிடம் அதை அவர் வழங்கினார்.

    அந்த சேலையை பெற்றுக்கொண்ட அவர் எனக்கு இன்று கடவுள் கொடுத்தது இது என்று சிரித்தார். இதை தொடர்ந்து அவருடன் உரையாடிய அந்த வாலிபர் உங்களின் ஆங்கில உரையாடல் வீடியோ எடுத்து நான் தொடர்ந்து வெளியிடுகிறேன். அதற்கான தொகையை உங்களுக்கு தருகிறேன் என்று கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

    இந்த பெண்ணின் உரையாடல் வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஞானசுதன் சீலி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி ஞானசுதன் சீலி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆலோசனைப்படி அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார் (வயது 34) மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் திட்டமிட்டு 20 நாட்களாக கடையை நோட்டமிட்டு இந்த நகை பறிப்பு சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர் என் பது தெரிய வந்துள்ளது.

    மேலும் மனைவி கவிதா அதிகமான கடன் தொல்லை இருப்பதால் எப்படியாவது கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 9 பவுன் நகையை மீட்டு வேறு ஏதாவது நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா, அவர்களுக்கு உடந்தையாக வேறு நபர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மதுரை

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில்வே கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692) சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதேபோல மதுரை - புனலூர் - மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். மேலும் திருச்சி - ராம நாதபுரம் - திருச்சி ரெயில்கள் (16849/16850) கீரனூர் ரெயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரெயில்கள் (20973/20974) புதுக்கோட்டை, ராமநாத புரம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 23-ந்தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

    மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராமநாதபுரம், காரைக்குடி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 24-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை-வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என செல்லூர்ராஜூ-ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளனர்.
    • காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பகுத்தறிவு பகலவன், காஞ்சி தந்த தங்கம் பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு, உள்ளாட்சி பிரதி நிதிகள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று பேரறிஞர் பெருந்தகைக்கு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேறிஞர் அண்ணாவின் சிலைக்கு நாளை (வெள்ளிக் கிழமை)காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் செயல்வீரர்களும், செயல்வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை மாநகர பகுதிகளில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாயமான 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைய டுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதி ரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன் களும் மீட்கப்பட்டன.

    இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் 31 செல்போன்களும் அடங்கும். மீட்கப்பட்ட செல்போன் களை அதன் உரிமையாளர்க ளிடம் இன்று காலை ஒப்ப டைக்கப்பட்டது.

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பிரதீப் (தெற்கு), சினேகபிரியா (வடக்கு), மங்களேஸ்வரன் (தலைமையிடம்) மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன.

    மேலும், ரூ.1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப் புள்ள சுமார் 279 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டு கோர்ட்டு மூலம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

    மேற்கண்ட அதிரடி நட வடிக்கைகளை திறம்பட செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன் பாராட்டினார்.

    ×