என் மலர்
மதுரை
- அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர்ராஜூ கூறினார்.
- அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.
மதுரை
மதுரை மாநகர் அ.தி.மு.க., தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணாமீது எம்.ஜி.ஆர். அதிக பாசம் கொண்டு இருந்தார்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப்படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளார்.
அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடினதும், நான் தான் முதல்-அமைச்சர் என்று சொல்கின்றனர்.
சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடி யாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக் கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் அரசியல்வாதிகளாக உள்ளனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.விற்கு தான் உரிமை உண்டு. தி.மு.க. வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்ட னர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் ஸ்டாலின் அப்பா விற்கு தப்பாமல் பிறந்திருக் கிறார்.
தற்போது சிலர் படித்த வனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் அவர்களை மிதித்து விடுவார்கள்.
ஆளும் கட்சி என்று மப்பில் பேசலாம். அண் ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்த வர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும்.
பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு பெரியார், அண்ணா தான் காரணம். அதிமுக ஆட்சியில் செயல் படுத்திய பல்வேறு திட்டங் களை தி.மு.க. மூடுவிழா கண்டு வருகிறது. எனவே அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- இலவச ஜூட் பேக், லேப்டாப், பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான அசஞ்ஜர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழிற்பயிற்சி பள்ளி இணைந்து மதுரை அவனி யாபுரத்தில் இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்பு ராமன் தலைமையில் நடை பெற்றது.
கே.வி.ஐ.சி மண்டல இயக்குனர் அசோகன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சுய தொழில் தொடங்குபவர்கள் மத்திய அரசின் 35 சதவீதம் மானிய தொகையை கடனாக பெறலாம் என்றார். இதில் பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகை யில், தமிழக அரசு மானி யத்துடன் புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சிக்கு பின் தொழில் முனைவோராக மாறுவதற்கு எல்லா உதவிகளையும் வழி முறைகளும் செய்து தரப் படும் என கூறினார். சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி வங்கி வழிமுறைகள், கடன் பெற்று முன்னேறும் திட்டங்கள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெட் கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.
- நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வலையங்குளத்தில் நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு திடலில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப் பட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும், நாட்டின் பெயர் மாற்ற முயற்சிக்கும் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது. இதனை ஜன நாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நூலகங்கள் கொண்டு செல்லப்படும் முயற்சியை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவுறை யாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசி னார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். குறிப்பாக முல்லை பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மேகதாது அணை திட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுவரை தமிழக மக்கள் உரிமைக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்று உள்ளேன். தமிழகத்திற்காக வும், நாட்டிற்காகவும் எனது குடும்பம் தியாகம் செய்துள்ளது.
கட்சியில் ஏதாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு கிடையாது என்று சொல்ல இருந்தேன். ஆனால் மாநாட்டில் பேசிய அவரே இதை கூறிவிட்டார். கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது துரை வைகோ கட்சி பணியாற்றினார்.
இந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தான். அவர் கட்சியை தென்மண்ட லத்தில் கட்டிக்காத்து வரு கிறார். என்னுடன் 19 மாதங்கள் பொடா சட்டத் தில் சிறையில் இருந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது:-
சனாதனம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்து கிறது. அம்பேத்கார், பெரி யார், அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் சனா தனத்தை எதிர்த்தன. அதனை வேரறுக்க வேண்டி யது ஒவ்வொரு தனி மனித னின் கடமையாகும்.
கட்சியில் எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என கூறுவது தான் எனக்கு பெருமை.
இவ்வாறு அவர் பேசி னார்.
முன்னதாக பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.
மாநாட்டில் கரு.சுந்தர், தண்டளை ஏ.ரமேஷ், எம்.சரவணன், பெ.முருக பெருமாள், துரை கே.ஜெய ராமன், பா.பச்சமுத்து, எஸ்.சண்முகவேல், எஸ்.ஆர்.பாண்டி, வக்கீல் சோ.பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணா பிறந்த நாள் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருமங்கலம்,
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகரில் உள்ள தெற்கு மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து அரசு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டியன், ராமமூர்த்தி, தனபாண்டி யன், நாகராஜன் பாண்டி யன், இளைஞர் அணி விமல், பொதுக்குழு உறுப்பி னர்கள் சிவமுருகன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், தகவல் தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- அண்ணா சிலைக்கு தி.மு.க- அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
- தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயலாளர் பால் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலா ளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன், முரளி வினோத், ராஜசேகர், அரவிந்த் முருகன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.
அழகர்கோவில் கோட்டைவாசல் முன்புள்ள அண்ணா சிலைக்கு பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன்.
மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் துணைச் செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, அ.வலையபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, அய்யாபட்டி நயினான், சென்னகரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், உட்கட்சி வேற்றுமையை மறந்து வரும் தேர்தலில் அனை வரும் பொறுப்பாளராக செயல்பட வேண்டும். மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் தங்களுக்குரிய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். செயல்படாத நிர்வாகிகள் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாளபட்டி சேர்மன் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் சுபைதா அப்பாஸ், தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், இளைஞர் அணி அமைப்பாளர் அழகுபாண்டி, வேலூர் யூனியன் துணை சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, பழனி வல்லாளப்பட்டி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சோழவந்தான்
சி.பி.ஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மதுரை கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மதுரை எஸ்.எஸ்.ஜி.ஏ. மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இந்த தொடரின் இறுதி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மற்றும் அத்யாபனா பள்ளி மாண வர்கள் மோதின. 15 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அத்யாபனா பள்ளி 13.1 ஓவர்களில் 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்தது.
பின் 49 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 7 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட் டுகள் மட்டும் இழந்து தங்க பதக்கம் வெற்றி பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக ஷமீர் மற்றும் தொடர் நாயகனாக ரிஷிசித்ரன் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
தொடரை வென்ற கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கணேச மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் களை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- சுற்றுச்சூழல் அணி சார்பில் ஜெசி என்ற ஜெயசிங்கராயர் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மதுரை
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு அண்ணா வின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் ஜெசி என்ற ஜெயசிங்கராயர் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தணிக்கை குழு உறுப்பினர் வேல்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாநில தீர்மான குழு அக்ரி கணேசன், அவைத்தலைவர் ஒச்சு பாலு, தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் போஸ் முத்தையா, வட்டச் செய லாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன் ஆர்.ஆர்.மகேந்திரன், புதூர் வேலு, வி.சி.மாதவன், அழகுசுந்தரம், உழவர் சந்தை திராவிட மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம்.
- மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
மதுரை
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்று தே.மு.தி.க. 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது.
இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மதுரையில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், குப்பை கூழமாகவும் இருக்கிறது.
மேலும் இந்த உரிமை தொகை ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போன்று. 'உன் பணம் பணம். என் பணம் பணம், உன் பணம் என் பணம்' என்ற நிலையில் தான் இருக்கிறது. மேலும் தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சனாதன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.
இப்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இதனால் சனாதனத்தை கையில் எடுக்கிறார்கள். அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பாலன், அழகர்சாமி, கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்திரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
- இந்த உரிமைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர்.
மதுரை
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணாவின் திருஉ ருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மாநிலங்களில் மாநில கட்சி ஆள முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தாரக மந்திரத்தை உருவாக்கினார். ஓலை குடிசையில் வசிக்கும் குரல், கோட்டை கொத்த ளத்தில் ஒலிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதிகாரப் பகிர்வு கடைக் கோடியிலும் இருக்க வேண்டும் என ஜனநாய கத்தை உருவாக்கினார் பேர றிஞர் அண்ணா.
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருணா நிதி பெயரை சூட்டியுள்ளார். அண்ணா பெயரை சூட்ட மறந்தது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது அதை ஞாபகப்படுத் தும் வகையில் இது போன்ற பெயர் சூட்டும் விழாவை முதலமைச்சர் நடத்துகிறார்.
தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த உரி மைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர். இதனால் இந்த திட்டத்தில் நிறைய குளறுபடி ஏற்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
- கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.
இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.
சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.
- கல் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார்.மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.






