சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை

சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

சோழவந்தான்

சி.பி.ஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மதுரை கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மதுரை எஸ்.எஸ்.ஜி.ஏ. மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இந்த தொடரின் இறுதி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மற்றும் அத்யாபனா பள்ளி மாண வர்கள் மோதின. 15 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அத்யாபனா பள்ளி 13.1 ஓவர்களில் 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்தது.

பின் 49 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 7 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட் டுகள் மட்டும் இழந்து தங்க பதக்கம் வெற்றி பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக ஷமீர் மற்றும் தொடர் நாயகனாக ரிஷிசித்ரன் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

தொடரை வென்ற கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கணேச மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் களை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com