search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
    X

    ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ பேசியதையும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

    நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்

    • நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வலையங்குளத்தில் நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு திடலில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப் பட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும், நாட்டின் பெயர் மாற்ற முயற்சிக்கும் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது. இதனை ஜன நாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நூலகங்கள் கொண்டு செல்லப்படும் முயற்சியை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாநாட்டில் நிறைவுறை யாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசி னார். அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். குறிப்பாக முல்லை பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மேகதாது அணை திட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுவரை தமிழக மக்கள் உரிமைக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்று உள்ளேன். தமிழகத்திற்காக வும், நாட்டிற்காகவும் எனது குடும்பம் தியாகம் செய்துள்ளது.

    கட்சியில் ஏதாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு கிடையாது என்று சொல்ல இருந்தேன். ஆனால் மாநாட்டில் பேசிய அவரே இதை கூறிவிட்டார். கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது துரை வைகோ கட்சி பணியாற்றினார்.

    இந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தான். அவர் கட்சியை தென்மண்ட லத்தில் கட்டிக்காத்து வரு கிறார். என்னுடன் 19 மாதங்கள் பொடா சட்டத் தில் சிறையில் இருந்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது:-

    சனாதனம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்து கிறது. அம்பேத்கார், பெரி யார், அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் சனா தனத்தை எதிர்த்தன. அதனை வேரறுக்க வேண்டி யது ஒவ்வொரு தனி மனித னின் கடமையாகும்.

    கட்சியில் எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என கூறுவது தான் எனக்கு பெருமை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    முன்னதாக பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் கரு.சுந்தர், தண்டளை ஏ.ரமேஷ், எம்.சரவணன், பெ.முருக பெருமாள், துரை கே.ஜெய ராமன், பா.பச்சமுத்து, எஸ்.சண்முகவேல், எஸ்.ஆர்.பாண்டி, வக்கீல் சோ.பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×