என் மலர்
மதுரை
- கள்ளழகர் கோவிலுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல்லை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினார்கள்.
- ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
அலங்காநல்லூர்
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
அப்போது பக்தர்கள் காணிக்கையாக உண்டிய லில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி, நேர்த்திக்கடனாக தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளையும் கள்ளழகர் என்ற சுந்தரராஜா பெரு மாளுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இதற்காக நெல்மணிகளை கொட்டி வைக்க தனி இட மும் ஆலயத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 28ஆயிரத்து 830 கிலோ (2ஆயிரம் முட்டை கள்) நெல்மணிகள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை ஏலம் விட்டு அளவீடு செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக கோவில் நிர்வாகத்தினல் செய்து வந்தனர். இதில் கோவிலுக்கு வருவாயாக ரூ.20 லட்சத்து 61ஆயிரத்து 280 கிடைத்துள்ளது. முந்தய ஆண்டு ஒரு லட்சம் கிலோ நெல்மணிகள் காணிக்கை யாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ நெல்மணி கூடுதலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
- தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
மதுரை
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று தொடங்கியது. இதை யொட்டி காலை 8.15 மணி யளவில் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி- பூதேவி யுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சுவாமி- அம்பாளுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளு கிறார்.
நாளை (18-ந்தேதி) காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 19-ந்தேதி காலை ராமாவதாரம், இரவு அனுமார் வாகனத்தில் எழுந்தருளல், 20-ந்தேதி காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகனத்தில் எழுந்தருளல், 21-ந்தேதி காலை ராஜாங்கசேவை, இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளல், 22-ந்தேதி காலை காளிங்கநர்த்தனம், மாலை மோகன அவதார நிகழ்ச்சி, இரவு யானை வாகனத்தில் எழுந்தருளல், 23-ந்தேதி காலை சேஷ சயனம், இரவு புஷ்ப விமானத்தில் எழுந்தருளல், 24-ந்தேதி காலை வெண்ணை தாழி, இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அன்று இரவு பெருமாள் பூப்பல் லக்கில் எழுந்தருளுவார். 26-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு பெருமாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளு கிறார். 27-ந்தேதி காலை, மாலை தெப்ப உற்சவம் நடைபெறும். 28-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- வார்டு குழு சபை கூட்டம் நடந்தது.
- பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் ேசாழ வந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டம் ஆறு மையங்களில் நடந்தது.1மற்றும்2 ஆகிய வார்டுக்கு பேட்டை குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நடந்தது.
வார்டு கவுன்சிலர் ஈஸ்வரிஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் முத்துச்செல்விசதீஷ்குமார் வரவேற்றார்.
சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம் கூட்டத்தின் நோக்கம பற்றி பேசினார். இதைத் தொடர்ந்து உறுதி மொழி வாசித்தார்.முன்னதாக பணியாளர் செல்வம் வரவேற்றார். அருண் நன்றி கூறினார்.
இதே போல் 8-வது வார்டு பகுதியில் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலரும் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
13-வது வார்டு சிவன்கோவில்தெருவில் வார்டு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார். குழுஉறுப்பினர்கள் சசிகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணதாசன் வரவேற்றார்.பேரூராட்சி பணியாளர்கள் சோனை, வெங்கடேசன், பாலமுருகன் பூவவலிங்கம்ஆகியோர் வார்டு குழு மக்கள் பயன்பாடு பற்றி பேசினார்கள். பணியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
இதே போல் மந்தைக்களம், பேரூராட்சி சமுதாயக்கூடம், ஆர்சி தெரு காளியம்மன் கோவில் தெரு, ஆர்எம்எஸ் காலனி நூலகம் ஆகிய இடங்களில் வார்டு குழு கூட்டம் நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற கூட்டத்திற்கு அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.
முடிவில் அசோக்குமார் நன்றி கூறினார்.
- துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
- மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை:
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.
இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர்.
அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
- தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.
இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.
அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.
- ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும்.
- சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை:
தேனி ரெயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து சேவையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சரக்கு அலுவலகம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும். இது மதுரை ரெயில்வே கோட்டத்தின் 19-வது சரக்கு முனையமாகும்.
இந்த அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சரக்கு பார்சல்களை பதிவு செய்வது, வாடிக்கையாளருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குவது, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற தகவல்களை பதிவது, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி ரசீதுகளை வழங்குவது, சரக்கு ரெயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும்.
இந்த சேவை மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியும். சரக்கு அலுவலக ரெயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களிலும் தங்கு தடையின்றி சரக்குகளை கையாள முடியும்.
இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும். மேலும் சரக்கு போக்குவரத்திற்காக தனி ரெயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் ரெயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு வர்த்தகர்கள் அறை மற்றும் கழிவறை குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. சரக்குகளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
போதுமான விளக்கு வசதிகளுடன் இரவு நேரத்திலும் சரக்குகளை தடையில்லாமல் கையாள போதுமான மின் விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை-போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரெயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும்.
இத்தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- சிலைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய பாளையங்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தடை விதிக்க கூடாது என வழக்கு.
- பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது என்றும் உத்தரவு.
திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சில யோசனைகளுடன், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது.
சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம்.
வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.
- டெங்கு காய்ச்சல் பாதிப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.
- கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை
உலக அளவிலும் இந்திய அளவிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுகாதாரத் துறையும் ஊரக உள்ளாட்சித் துறையும் இணைந்து வீடு வீடாக சென்று தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது தொடர் பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நல்ல நீரில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் குடிநீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும் எனவும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும், அவர் கள் அறிவுறுத்தி வருகின்ற னர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை தரக்கூடாது என மருந்து கடைகளுக்கும் அறிவுரை தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை யில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக் கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 25 குழந்தை களுக்கான படுக்கைகள், 44 பெரியவர்களுக்கான படுக்கைகள், ஐ.சி.யூ. பிரிவில் பெரியவர்களுக்கு 20 படுக்கைகள், குழந்தை களுக்கு 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக இந்த வார்டில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிப்ட் முறையில் செயல்படும் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாளில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள் ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் முழு வதிலும் 70-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்ற னர். மாவட்ட அளவில் இன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்வ தற்காக ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்ப பட்டுள்ளது. இதற்கிடையே நகர், கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாகக்குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.
- முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
மதுரை
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் ஆண்கள் கல்லூரியில் நிர்வாக குழு தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலை யில் நடந்தது .
இதில் இரு அணிகளாக போட்டியிட்ட நிலையில் யாதவ மகாசபையினர் 1500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் மதுரை தொழி லதிபர் எஸ். ஜெயராமன் தலைமையிலான நிர்வாக குழு அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாக குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக சிவ ராமகிருஷ்ணன், செயலாளராக ஆர்.வி.என்.கண்ணன், இணை செயலா ளராக எஸ்.முத்து கிருஷ் ணன் என்ற கிட்டு, பொரு ளாளராக கிருஷ்ண வேல், மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் மணி செல்வன், பாலகிருஷ்ணன், செந்தில், பாண்டியன், கே. கண்ணன், எல். முத்து கிருஷ்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாக குழுவினர் தலைவர் ஜெயராமன் தலைமையில் கல்லூரி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கல்லூரி அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.
புதிய நிர்வாக குழுவை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
- மதுரையில் துரத்திச்சென்று கடிக்கும் வெறி நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் அதிகாரிகள்.
மதுரை
மனிதர்களின் உற்ற நண்பனாக வீட்டு விலங்கான நாய் உள்ளது. வீட்டு காவலாளி யாகவும் நன்றியுள்ள பிராணி யாகவும் உள்ள தெரு நாய்கள் தொல்லையால் தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுதந்திரமாக வெளியே சென்று வர முடிவதில்லை.
மதுரை மாநகராட்சியை பொறுத்த வரை முன்பு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது நாய்களின் எண்ணிக்கை தெருவுக்கு தெரு குறைந்தது 5 முதல் 10 வரை சுற்றி திரிகிறது. எப்போதும் ஆக்ரோசத்துடன் காணப்படும் தெரு நாய்கள் நடந்து செல்வோரையும், மோட்டார் சைக்கிளில் செல்வோரையும் துரத்து துரத்தி கடிக்கின்றன.
மேலும் தெருக்கள், சாலைகளில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் நாள்தோறும் தெருநாய்களால் கடிப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பலாக சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை வாகனம் வாங்கப் பட்டு வார்டுகள் தோறும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
அந்தத் திட்டம் தற்போது முழுவதும் முடங்கி உள்ளது. மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை.
இதனால் மதுரையில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகள், ஜெய்ஹிந்த்புரம், பெரியார் பஸ் நிலையம், சோலை அழகுபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, பழங்காநத்தம், காளவாசல் என எந்த பகுதி என்று குறிப்பிட முடியாமல் அனைத்து பகுதிகளிலும் நீக்க மற நாய்கள் நிறைந்துள்ளன. மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறதோ? இல்லையோ? நாய்களின் நடமாட்டம் 24 மணி நேரமும் காணப்படுகிறது.
மதுரையில் தனியாக நடந்து செல்பவர்களை நாய்கள் குரைத்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பீதி அடையும் சிறுவர்கள், பெரியவர்கள் நாய்களிடம் சிக்காமல் இருக்க ஓடுகின்றனர். இந்த செயலால் மேலும் ஆக்ரோஷம் அடையும் நாய் அவர்களை விரட்டி சென்று கடிக்கிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்த வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முகம், கை, கால் களில் கீறி ரத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
இதிலும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோய் தாக்கப்படுபவர்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தனி செல்லில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேபிஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைப் பது என்பது அரிது. நாய்களின் மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் தாக்கி மனித உயிரை காவு வாங்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு கொடூரமான தாக இருக்கும்.எனவே நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது. இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும், 2022-ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதன் பாதிப்பு மேலும் அதிகரித்து உள்ளது.
இவ்வளவு பாதிப்புகளை கொண்ட வெறி நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சிகள் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்துக் குரியது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் விலங்குகள் நல அமைப்பு, விதிமுறைகள் என சாக்குப் போக்குகளை கூறி தட்டிக் கழிக்கின்றனர்.
எனவே இனியும் தாம திக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சு றுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- எதிர்க்கட்சி தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
மதுரை
பேரறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த ஸ்டாலின். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்.
இன்றைக்கு 28 மாத
தி.மு.க. ஆட்சியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலணி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதில் திருமங்க லத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை காணோம்., அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்க் பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம்.
அதே போல் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை யும் காணோம். அதேபோல் இந்த செக்கா னூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.இது போன்ற மக்கள் பிரச்சி னையில் எதிர்க்கட்சி தொகு திகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்சினைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி, பதவிக்காக மக்கள் அல்ல.
99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத் தின் வாயிலாக சவால் விடுகிறேன். மக்கள் மத்தியில் இது குறித்து விவாதிப்போம். அப்படி மக்கள் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை
மதுரை சிந்தாமணிரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. மகன் மணிகண்டன் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத் தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக் குள் அத்துமீறி நுழைந்த மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தமாக கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட னர். இதனால் அச்சமடைந்த மணிகண்டன் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் மன உளைச் சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து அந்த டவுன் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






