சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
Published on

மதுரை

மதுரை சிந்தாமணிரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. மகன் மணிகண்டன் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத் தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக் குள் அத்துமீறி நுழைந்த மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தமாக கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட னர். இதனால் அச்சமடைந்த மணிகண்டன் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் மன உளைச் சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து அந்த டவுன் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com