என் மலர்tooltip icon

    மதுரை

    • பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது.
    • வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க. சார்பில் டி.எம்.கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர். தி.மு.க. அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐம்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தி.மு.க.

    அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னி லைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளை களையும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ அதுபோல் தான் அண்ணா அனை வரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு.

    தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரசாரம் செய்கிறார்கள், சுற்றுப் பயணம் செய்கிறார்கள். ஆனால் பட்டினி கிடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா. தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணா உருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளை கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மூடு விழா கண்டுள்ளது.

    மதுரையில் 2 அமைச்சர்கள் இருக்கி றார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள்.

    வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாராளுமன்ற தேர்தலுக்காகவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமையை தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது. பொம்மை முதலமைச்சராகவே அவர் இருக்கிறார். பிறர் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.

    தி.முக. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை யான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பரவி வரும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
    • சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழை,எளிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் காரணமாக தற்போது காய்ச்சல் பரவி வருகிறது.

    தலைவலி, உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். டெங்கு பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே அந்த பகுதியில் சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையை கண்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

    மேலும் மழைநீர் தேங்கா மலும், தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அகற்றுவதுடன், கொசு உற்பத்தியை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிரேட் இந்தியன் சர்க்கஸ் கலைஞர்கள் சாகச நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
    • கடந்த 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மதுரையில் மக்களை மகிழ்விக்க வந்துள்ளது.

    மதுரை

    பொழுது போக்கு அம் சங்களில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளுக்கு என்றுமே தனிப்ெபருமை உண்டு. அந்த வகையில் ஆசியாவி லேயே மிக்பெரியதும், உல கப்புகழ் பெற்றதுமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவனம் சுமார் 45 ஆண்டு கள் பாரம்பரியம் மிக்கதா கும். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய, மலேசிய மற்றும் ரஷ்ய நாட்டு அனுபவமிக்க சாகச வீரர்களின் மயிர்ச் கூச்செரியும் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடம் எப்போ துமே அதிக ஆதரவு உண்டு.

    கடந்த 5 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மீண்டும் மதுரையில் மக்களை மகிழ் விக்க வந்துள்ளது கிரேட் இந்தியன் சர்க்கஸ். அதன் படி செப்டம்பர் 15-ந்தேதி முதல் மதுரை அய்யர்பங் களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனத்தா ரின் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

    தினசரி மூன்று காட்சி யாக சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு காட்சிகள் நடை பெறும். பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை காலங் களை முன்னிட்டு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் ஊழி யர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் புதிய நிகழ்ச்சி–களும் அரங்கேற உள்ளன.

    பீமல் பார் விளையாட்டு கள், கலைஞர்கள் பங்கேற் கும் சர்க்கஸ் பைரைடு (அணிவகுப்பு), நேபாள் கலைஞரின் ஜிக்விங் விளை யாட்டு, கோமாளிகளின் நகைச்சுவை விளையாட்டு கள், அரேபிய நாட்டு ஒட்ட கங்களின் சாகசங்கள், கேரள அழகிகளின் சைக் கிள் சாகசங்கள், ஆஸ்திரே லியா நாட்டு கலைஞரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் அக்ரோபட் எனப்படும் மயிர்க்கூச்செரியும் சாகச நிகழ்ச்சி,

    குதிரை சாகசங்கள், மரண கூண்டிற்குள் 3 பேர் செய்து காட்டும் அதிபயங்கர நிகழ்ச்சிகள், பொமேரியன் நாய்கள் செய்து காட்டும் வித்தைகள், மணிப்பூர் மாநில கலைஞர்கள் பங் கேற்கும் கத்தி மேல் சாகசங்கள், பிரமிப்பூட்டும் ரோப் பேலன்ஸ், மிகச்சிறிய சைக்கிள் சாகசங்கள், கொல் கத்தா அழகிகளின் துப்பாக்கி சூட்டிங், மகாராஷ்டிரா அழகிகளின் குரூப் டெண்டல் பேலன்சிங், 8 அழகிகள் பங்கேற்கும் சாக சங்கள், பிரமிப்பூட்டும், அதிபயங்கர பயர் டான்ஸ், மணிப்பூர் கலைஞர்களின் சேர் பேலன்ஸ்,ேபான்ற எண்ணற்றி சாசக நிகழ்ச்சி களை கண்டுகளிக்க குடும் பத்தினருடன் வருமாறு கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவன மேலாளர்கள் வி.தேவராஜ், ஏ.எம்.எஸ்.நாசர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மதுரை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

    மதுரை

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை மார்க் கெட்டுகளில் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. மதுரை யிலும் வழக்கமான உற்சா கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மதுரை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில் களிலும் விநாய கருக்கு சிறப்பு படையல் செய்து பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு மார்க்கெட்டுகளிலும் வழக்கத்தைவிட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் முக்கிய சாலை களின் இருபுறங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அவல், அரிசி பொறி, பொறிகடலை, வாழை கன்றுகள், அருகம் புல் மாலை, எருக்கலை மாலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.

    பழ மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இதற்காக வழக்கத்தை விட மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட் களில் காய்கறிகளை வாங்க வும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    இதனால் நாட்டு காய்கறி களான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, சுரைக் காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறி களும் சிறிதளவு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வரு கிறார்கள்.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் குறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    இதன் காரணமாக பூஜை பொருட்கள்,பழங்களின் விலைகளும் சற்று அதி கரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பூ -சிலை விற்பனை அமோகம்

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் 500 ரூபாய்க்கும் மற்ற பூக்கள் வழக்கமான விலை யிலும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. பூக்களை வாங்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபாடு செய்வ தற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கண்கவர் வண்ணங்களிலும், வடிவங்களிலும் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, தெப்பம் துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பலி, சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தின புரம், பிக்சர் ரோடு. இந்திரா நகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, எம்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர்.

    மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
    • லின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கு கிறார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மேலூரில் கலை ஞர் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழா நடைபெறு கிறது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத் தில் தி.மு.க. கொடியேற்றுகிறார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் கொடியேற்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் அமைந்துள்ள கலைஞர் திடலில் ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத் தின் இளைஞர் அணியினர் பங்கேற்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கு கிறார். விழாவிற்கான ஏற்பா டுகளை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் மாவட்ட கழகத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் பெரியாரின் 145-வதுபிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரம், சந்தை வாசல், தமிழன் லாரி எடை நிலையம் ஆகிய இடங்களில் திராவிட கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்ட காப்பாளர் சு.தனபாலன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.

    உசிலை மாவட்டத் தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    இதில் தங்கராஜ், அர்ச்சுதன், கண்ணன், சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட துணை தலைவர் கவிஞர் பொன். கலை தாசன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். தி.மு.க. சார்பாக போடி நாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அதியர்பிரிய ன் வரவேற்றார். கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ ம் மாலை அணிவித்தார். இதில் முரளி, வீரன், அகத்தியன், முத்து சிவா, ஸ்ரீராம், சிவகுமார், சந்தன மாரி, பழனியம் மாள், பாண்டியம் மாள், கிருஷ்ணா மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமாயன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் மரியாதை செலுத்தப் பட்டது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செய லாளர் பெரியபாண்டி செல்லராஜ், ராமகிருஷ் ணன், நகர் செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பி னர்கள் புலிப்பாண்டி, மகேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதய ராஜன், எழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெய பாலன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    திராவிட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், நகர தலைவர் பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமா யன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் 700 பனை விதைகளை சேகரித்தனர்.
    • தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    பனை மரம் தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்வி லும், வரலாற்றிலும், பொரு ளியலிலும் 2,000 ஆண்டுக ளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனை தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மீனவர்கள் குடியிருப்பு கள், துறைமுகங்கள், உயிரி யல் பூங்கா, அரிய வகை மீன்கள், நீர்வாழ் உயிரினங் களை காக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், காலநிலை மாற்றத்தினை தணிக்கும் வகையிலும் ஒரு கோடி பனை விதைகளை பதிய மிட்டு பாதுகாக்கும் பணி களை தமிழக அரசு முன்னெ டுத்து செய்து வருகிறது.

    இந்த பணிக்கு உதவி புரியும் வகையில் திருமங்க லம் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் சிந்து பைரவி, அனிதா, அக்குமாரி, அருந்ததி, பக வதி கண்ணன், மருது பாண்டி, தங்கராஜ், மணி கண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ராயபாளையம் மற்றும் திறளி ஆகிய கிராமங்களுக்கு சென்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்தனர்.

    அந்த விதைகளை கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செந்தில் குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் பாண்டி ஆகியோரிடம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலு வலர் முனைவர் முனி யாண்டி, முனைவர் சிங்க ராஜா ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கினார்.

    பனை விதைகளை பெற்றுக் கொண்ட மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் மதுரை காம ராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோர் அன்னை பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டு களை தெரிவித்தனர்.

    • அலங்காநல்லூர் பகுதியில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்தி ரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்த னர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, மரியம்மாள்குளம் உள்ளிட்ட பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பசு கடன், பால் மாடு பராமரிப்பு கடன் வங்கிகள் மூலம் பெற்று தருவது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது, மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும் என ஆவின் பொது மேலாளர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப் பன்பட்டியில் பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் பெரி யாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில விவ சாய அணி இணை செயலா ளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், தனசேகரன், பேரூர் செயலாளர் வருசை முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வில்லூர் ஞானசேகரன், பரமசிவம், வழக்கறிஞர் அணி அமைப் பாளர் ஆனந்த், கீழக்குயில் குடி செல்வேந்திரன், திரு மங்கலம் நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
    • மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் செல்ல காத்திருந்தனர். ஆனால் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிவகங்கை, ஏரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் கடும் அவதியடைந்தனர். பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் பலமணி நேரம் காத்திருந்தனர்.

    இதனால் கடும் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென பஸ்நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் மேலூர் அரசு பஸ் டிப்போ அலு வலகத்திற்கு தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறயில் கைவிடப்பட்டது. மேலூரில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் சரியான நேரத்திற்கு வருவதில்லை.

    முகூர்த்த காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. இதனால் பொது மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலையும் மாற வில்லை என பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர்.

    ×