ஆவின் பொது மேலாளர் ஆய்வு

அலங்காநல்லூர் பகுதியில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்தி ரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்த னர்.
ஆவின் பொது மேலாளர் ஆய்வு
Published on: 

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, மரியம்மாள்குளம் உள்ளிட்ட பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பசு கடன், பால் மாடு பராமரிப்பு கடன் வங்கிகள் மூலம் பெற்று தருவது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது, மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும் என ஆவின் பொது மேலாளர் கூறினார்.

ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com