என் மலர்tooltip icon

    மதுரை

    • திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
    • சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே திறந்தவெளியில் ரெயில்வே தண்டவாளம் இருந்தது. இதனை அந்தப்பகுதி மக்கள் கடந்து சென்று வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து ஹார்விபட்டிக்கு எளிதாக சென்று வர முடிந்தது. இந்த நிலையில் திறந்தவெளி ரெயில்வே தண்டவாள பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே தண்டவாள பகுதியை மூடியது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.

    பொதுமக்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்தபடி ரெயில் நிலைய தண்டவாள பகுதி திறந்த வெளியாக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவும், மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் தற்போது பதில் அளித்துள்ளது. அதில் திருப்பரங்குன்றம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், அருகில் தென்கால் கண்மாய் இருப்பதால் சுரங்கப்பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுடன் இணைந்து விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முஸ்லீம்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கித்தர வேண்டும் என அமைச்சருக்கு மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மதுரை

    மதுரை ஆனையூர் மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சிலையனேரி ஆனையூர் மற்றும் ரெயிலார் நகர், தினமணி நகர், கோவில் பாப்பாகுடி, விளாங்குடி பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களது உடல் நல்லடக்கம் செய்ய 10 கி.மீ. தூரத்தில் உள்ள மகபூப் பாளையம் மைய வாடிக்கு உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அங்குள்ள 10 செண்ட் நிலத்தில் பல வருடங்களாக 25 பள்ளிவாசலை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அங்கு மண்ணின் தன்மை இழந்துவிட்டதால் உடல்கள் மக்குவதற்கு வெகு நாட்களாகிறது. எனவே அங்கு அடக்கம் செய்ய முடியவில்லை. எனவே ஆனையூர் மல்லிகை நகர் பொது மயானம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 17 செண்ட் நிலத்தை முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய ஒதுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கிழக்கு மண்டல உதவி ஆணையர் , மண்டல தலைவர் ஆகியோர் நேரில் வந்து இடத்தை பார்வை யிட்டு சென்றனர். ஆனால் அதன்பின் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோட்டில் உள்ள ஏ.ஜி.சுப்புராமன் தெருவை சேர்ந்தவர் செந்தில்பாண்டி. இவரது மகன் சஞ்சய் (வயது18). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அதன்பின் பள்ளிக்கு செல்லவில்லை.

    மது பழக்கத்திற்கு அடிமையான சஞ்சய் சம்பவத்தன்ற போதையில் செல்போனை உடைத்து விட்டார். புது செல்போனை வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதில் விரக்தியடைந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

    இளம்பெண்

    ஆனையூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி நாகலட்சுமி(வயது27). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த நாகலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்மட்டிபுரம் மனோ ரஞ்சிதம் தெருவை சேர்ந்த வர் கேசவராஜ்(வயது30). இவருக்கும், இவரது மனைவி ரேவதிக்கும் குடும்ப பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவர்களை அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மன அழுத்தத்தில் இருந்த கேசவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் மர்மமான முறையில் பட்டதாரி வாலிபர் இறந்து கிடந்தார்.
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    மதுரை மகால் 8-வது தெருவை சேர்ந்தவர் ராமகோடி. இவரது மகன் ராமவிக்னேஷ்(வயது27). டிப்ளமோ பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக உறவினரின் புத்தக கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது பாட்டி அருகில் உள்ள பந்தடி பகுதியில் வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தினமும் ராமவிக்னேஷ் பாட்டி வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம்.

    இந்தநிலையில் அவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ராமவிக்னேஷ் அதன் பின் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பலனில்லை.

    இதனிடையே பந்தடியில் உள்ள பாட்டி வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தெற்கு வாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் ராமவிக்னேஷ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக ராமகோடி தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீட்சா, பர்கர் போன்ற துரித உணவை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
    • அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் திருமங்கலம் வட் டார ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதி யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற் றது.

    இதில் இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய விட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்தான உணவை மாணவ, மாணவிகள் உட் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும் என கூறினார்.

    மருத்துவ அலுவலர் ஹரிஷ் ஊட்டச்சத்து சரி விகித உணவு பற்றியும், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி ரத்த சோகை பற்றியும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாரதி பெண்களுக்காக அரசு வழங்கும் சுகாதார திட்டங் கள் பற்றியும் எடுத்துரைத் தனர்.

    இறுதியில் ஊட்டச் சத்து பற்றி எழுப்பிய வினாக்க ளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவிக ளான தமிழ் துறை யைச் சார்ந்த ஹரி சங்கர், துர்க்கா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஹேமஸ்ரீ, ரூபஸ்ரீ, நாகஜோதி ஆகியோ ருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக தமிழ்த்து றைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரு மான முனைவர் முனி யாண்டி வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி, ஆறுமுகஜோதி வர லாற்றுத்துறைத் தலை வர் மணிமேகலை, உதவிப்பேரா சிரியர் இருளாயி, வணிகவி யல் துறை உதவிப்பேராசி ரியர் சிவசுந்தரி, சகாய வாணி, முத்துலெட்சுமி, கதிரேசன் உள்ளிட்ட 20 பேராசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நல பணித்திட்ட தொண்டர் கள் செய்தனர். இறுதியில் வணிகவியல் துறைத்தலை வர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மதுரை

    சேலத்தில் வருகிற டிசம் பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு பிர மாண்டாக நடைபெற உள் ளது. இதையொட்டி கட்சியி னரை உற்சாகப்படுத்தும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பங் கேற்று வருகிறார்.

    அத்துடன் தி.மு.க. விற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு அவர் பொற்கிழி களும் வழங்கி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாள ருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோரது தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இரவில் தனி யார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத் தலை விகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 பெறும் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உரிமைத் தொகை பெறுவதற் கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் உள்ள கலைஞர் திடலில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மூத்த முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைெபற் றது. விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேருக்கு ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கி பேசினார்.

    அப்போது தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி யலிட்ட அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் சுங்கச் சாவடி எதிரில் கலை ஞர் திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுரு வச்சிலையை திறந்து வைக் கிறார். மேலும், 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடிேயற்றுகிறார்.

    இதையடுத்து விரகனூர் அருகே ரிங் ரோட்டில் அமைந்துள்ள கருணாநிதி திடலில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோச னைகள் வழங்குகிறார். பின்னர் இரவில் அழ கர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (21-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள முத்தப்பன்பட்டி யில் நடைபெறும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந் தல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து அங்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை யில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிக ளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கி றார்.

    மாலை 5 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்குகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத் தில் 7,000 மூத்த முன்னோடி களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 கோடி மதிப்பில் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன், தளபதி எம்.எல்.ஏ. மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே தி.மு.க. பொற்கிழி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள சேடப்பட்டியார் திடலில் நாளை (21-ந்தேதி) காலை முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலா மாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழா நடைபெற உள்ளது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். விழா முடிவில் கட்சியினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இதனிடையே முத்தப்பன்பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு தோரணங்கள், வாகனங்களை நிறுத்த இடவசதி உள் ளிட்ட ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    இந்த இறுதிகட்ட ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட செய லாளர் சேடபட்டி மு.மணிமாறன், தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பா.மதன் குமார், மாவட்ட இளை ஞரணி அமைப்பா ளர் விமல் துணை அமைப்பா ளர் தென்பழஞ்சி சுரேஷ்.அணி அமைப்பாளர் பரமசிவம், ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் கூறுகையில்,

    முத்தப்பன்பட்டி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமங்கலம்-ராஜபா ளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.குன்னத்தூரில் வைத்து நாளை காலை 9 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளா னோர் அலை கடலென திரண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித் திடுமாறு கேட்டுக்கொள்கி றேன் என்றார்.

    தி.மு.க. விழாவை யொட்டி முத்தப்பன்பட்டி யில் திரும்பிய திசையெல் லாம் தி.மு.க. கொடி கள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன்.
    • செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் அரசியல் விஞ்ஞானியாக கலாய்க்கப்பட்டு வருகிறேன். எனது சொந்தக்கதை, சோகக்கதையை இப்போதும் சொல்ல விரும்புகிறேன், நீங்களும் கேளுங்கள்.

    மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது.

    அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

    அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. எனவே இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம், அதற்குள் மழை வந்துவிடும் பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.

    இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர் என்னை செல்போனில் அழைத்தார். நாம் வைகை அணைக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம் என்றார்.

    இது தொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர்களும் இது சாத்தியமானது தான். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இதனை பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது என்று தெரிவித்தனர்.

    நானும் கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன். அங்கு சென்றதும் அதிகாரிகள் அணையின் உள் பகுதியில் தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம் அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன.

    இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். அதற்காக ரஸ்க் ஆகி விட்டேன்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கலகலப்பாக பேசினார்.

    அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் இதனை கேட்டு சிரித்தனர்.

    • தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மஸ்தான் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதுபோல் தெரியவில்லை. இதனை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

    பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம்.

    தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார். எனவேதான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் எப்போதும் இருக்கக்கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதான விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    • மதுரையில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது.
    • இதனால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகள் அதிகரித்தாலும் அதற்காக எந்த வசதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை.

    விரிவாக்க பகுதியான அவனியாபுரம், வில்லா புரம், வண்டியூர், திருப்ப ரங்குன்றம் போன்ற பகுதி களில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை வசதி போன்றவை கொண்ட வரப்படவில்லை.

    மேலும் வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. மாந கராட்சி சாா்பில் குப்பை களை சேகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் 90 சதவீதம் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் 100 சதவீதம் மனித உழைப்பை நம்பியே உள்ளது.

    இதன் காரணமாக மாநகராட்சியில் குப்பைகள் முழுவதும் அகற்றப்படு வதில்லை. இதனால் முக்கிய சாலைகள், தெருக் கள் என அனைத்து பகுதி களிலும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. பண் டிகை காலங்களில் வழக் கத்தை விட குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. இத னால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மதுரையில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வாழை மரம், மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு முதல் குவியல் குவியலாக குப்பை தொட்டியில் பொதுமக்கள் போட ஆரம்பித்தனர். சிலர் நடுரோட்டிலும் குப்பைகள் கொட்டுவதை பார்கக முடிகிறது.

    இதன் காரணமாக இன்று காலை மதுரை நகரம் குப்பை காடாக காட்சியளித்தது. குறிப்பாக பெரியார் பஸ்நிலையம், மாசி வீதிகள், ஜெய்ஹிந்துபுரம், மகால் பகுதிகள், ஜீவா நகர், செல்லூர், அண்ணாநகர், பி.பி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் பகுதியில் குப்பைகள் தேங்கின.

    பணியாளர்கள் பற்றா குறையால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததாலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் இன்னும் அதற்கான முன்னெடுப்பை தொடங்க வில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி தற்போது சுகாதார சீர்கேட்டில் உள்ளது.

    • தெற்கு மாசி வீதி, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் மாடுகளால் பொதுமக்களை அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மதுரை மாநகராட்சியில் கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் நகர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நகரில் மாடுகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் மாடுகள் சாலையில் சர்வ சாதரணமாக சுற்றி திரிகின்றன.

    மேலும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றன.

    மதுரையில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்கு மாரட்வீதி, மாசி வீதிகளில் மாடுகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படு கிறது. குறிப்பாக தெற்கு கிருஷ்ணன்கோவில் தெரு, தெற்கு மாசி வீதி 24 மணி நேரமும் மாடுகள் முகாமிட்டு சாலையை ஆக்கிரமிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் கடும் அவதியடைகின்றனர்.

    சில நேரங்களில் மாடுகள் ஆக்ரோசமாக மோதி கொள்வ தால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடை கின்றனர். மாட்டின் உரிமை யாளர்கள் தொழுவத்தில் அடைக்காமல் பால் கறந்துவிட்டு வெளியில் விட்டு விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அண்மையில் சென்னையில் மாடு முட்டியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதை யடுத்து மாநகராட்சி கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையா ளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியிலும் கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்.
    • மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 18 படியில் மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்புகள் பல உண்டு. இந்த விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. மன்னர் திருமலை நாயக்கர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார்.

    அப்போது பூமிக்குள் இருந்து 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலை இருப்பதை கண்டார். அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து, முக்குறுணி விநாயகராக வழிபட்டார்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜை, மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல், 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து, மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த கொழுக்கட்டையை 4 பேர் மூங்கில் கம்பில் சுமந்து வந்தனர். மெகா கொழுக்கட்டையை பகல் 11 மணிக்கு உச்சிக்கால பூஜையின் போது முக்குறுணி விநாயகருக்கு படைத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் பட்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×