search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி
    X

    மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொன்னாடை வழங்கி வரவேற்ற காட்சி. அருகில் மேயர் இந்திராணி உள்ளார்.

    தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மதுரை

    சேலத்தில் வருகிற டிசம் பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு பிர மாண்டாக நடைபெற உள் ளது. இதையொட்டி கட்சியி னரை உற்சாகப்படுத்தும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பங் கேற்று வருகிறார்.

    அத்துடன் தி.மு.க. விற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு அவர் பொற்கிழி களும் வழங்கி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாள ருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோரது தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இரவில் தனி யார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத் தலை விகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 பெறும் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உரிமைத் தொகை பெறுவதற் கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் உள்ள கலைஞர் திடலில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மூத்த முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைெபற் றது. விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேருக்கு ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கி பேசினார்.

    அப்போது தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி யலிட்ட அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் சுங்கச் சாவடி எதிரில் கலை ஞர் திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுரு வச்சிலையை திறந்து வைக் கிறார். மேலும், 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடிேயற்றுகிறார்.

    இதையடுத்து விரகனூர் அருகே ரிங் ரோட்டில் அமைந்துள்ள கருணாநிதி திடலில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோச னைகள் வழங்குகிறார். பின்னர் இரவில் அழ கர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (21-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள முத்தப்பன்பட்டி யில் நடைபெறும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந் தல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து அங்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை யில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிக ளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கி றார்.

    மாலை 5 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்குகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத் தில் 7,000 மூத்த முன்னோடி களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 கோடி மதிப்பில் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன், தளபதி எம்.எல்.ஏ. மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×