என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாகக்குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு
  X

  மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாகக்குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாகக்குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.
  • முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

  மதுரை

  மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் ஆண்கள் கல்லூரியில் நிர்வாக குழு தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலை யில் நடந்தது .

  இதில் இரு அணிகளாக போட்டியிட்ட நிலையில் யாதவ மகாசபையினர் 1500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் மதுரை தொழி லதிபர் எஸ். ஜெயராமன் தலைமையிலான நிர்வாக குழு அமோக வெற்றி பெற்றது.

  இதைத்தொடர்ந்து யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாக குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக சிவ ராமகிருஷ்ணன், செயலாளராக ஆர்.வி.என்.கண்ணன், இணை செயலா ளராக எஸ்.முத்து கிருஷ் ணன் என்ற கிட்டு, பொரு ளாளராக கிருஷ்ண வேல், மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் மணி செல்வன், பாலகிருஷ்ணன், செந்தில், பாண்டியன், கே. கண்ணன், எல். முத்து கிருஷ்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

  புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாக குழுவினர் தலைவர் ஜெயராமன் தலைமையில் கல்லூரி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கல்லூரி அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.

  புதிய நிர்வாக குழுவை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

  Next Story
  ×