என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
    • டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ்சரகம் ரங்கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரிகிருஷ்ணன் (வயது 27). இவர் இன்று காலை சீர்பனந்தல் கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருவரங்கம் சாலை வளைவில் திரும்பியபோது எதிரே கரும்புலோடு ஏற்றிய டிராக்டர் வந்தது. இதன் மீது மோதாமல் இருக்க அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். அந்த நேரம் டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இதுகுறித்து பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அரிகி ருஷ்ணன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உளுந்தூர்பேட்டை அருகே: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செங்காந்தல் மலர் பூத்துள்ளது.
    • இந்த மலர் தமிழ்நாட்டின் தேசிய மலராக விளங்குகிறது

    கள்ளக்குறிச்சி:

    அரிய வகை மலர்களில் ஒன்றான செங்காந்தல் மலர். இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்து மலரும் தன்மை கொண்டது. இந்த மலர் தமிழ்நாட்டின் தேசிய மலராக விளங்குகிறது. இது தமிழகத்தின் மலராகவும் விளங்குவது கூடுதல் சிறப்பு. கார்த்திகை மாதங்களில் பூப்பதால் இதை கார்த்திகை மலர் எனவும், தீச்சுவாலை போன்ற உருவ அமைப்பு கொண்டுள்ளதால் தீச்சுவாலை மலர் என்றும் அழைக்கப்படுகிறது.

    மேலும் இந்த மலரை பார்த்தால் கண் வலி ஏற்படும், என கிராமங்களில் பரவலான நம்பிக்கை உள்ளதால் கண்வலி மலர் என பல்வேறு பெயர்களில் இந்த மலர் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த மலர் பல்வேறு விஷமுறிவு மருந்துகளுக்கு மலரின் இதழ், தண்டு, விதை, வேர்கிழங்கு உள்ளிட்டவை பயன்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் உள்ளி ட்ட சுற்றுவட்டாரத்தில் இவை பணப்பயிராக பயிரிடப்பட்டு அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த மலர் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றிலுமுள்ள பகுதிகள் தற்போது பூத்து குலுங்குகிறது. 

    • ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது.
    • பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதா ரஇயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்புத னியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். முகாம் வருகின்ற 22.10.2022 அன்று ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது. இதில் 2020, 2021 மற்றும் 2022-ம்கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, 18 முதல் 20 வயதுடைய விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

    அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்வி ண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம்,உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். எனது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்து ள்ளார்.

    • திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கெடிலம் பகுதியில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. இந்த மானிய பொருட்கள் நேற்று கெடிலம் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வந்தது. இதனை அடுத்து விவசாயிகள் தங்களது விவசாய நில சிட்டா அடங்கள் கொடுத்து அரசு மானியத்தை வாங்கி சென்றனர். இதனால் வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை டெப்போ மேனேஜர் செந்தில்நாதன் விவசாயிகளிடமிருந்து விவசாய சிட்டா நகலை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் ரூபாய் 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    இதுகுறித்து சில விவசாயிகள் கேட்டதற்கு செந்தில்நாதன் சரிவர பதில் கூறவில்லை. இதனால் விவசாயிகள் கள்ள க்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி பாலசுதர் இன்ஸ்பெ க்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆய்வின் முடிவில் வேளாண்மை துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 4,20,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வேளாண்மை துறை அதிகாரியான செந்தில்நாதனிடம் அரசு வழங்கிய மானியம் 40 ரூபாயை விட அதிகமாக விவசாயிகளிடம் பணம் வசூலித்து ரசீது இல்லாமல் மானிய பொருள்களை விற்பனை செய்ததற்கான காரணத்தை கேட்டனர். இதற்கு செந்தில்நாதன் செய்வதறியாது திகைத்து நின்றார். மேலும் போலீசார் இது குறித்து செந்தில்நாதன் மற்றும் அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார்.
    • 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 62) இவரது கணவர் அருணாச்சலம் (73). இவர்களுக்கு பிரசாந்த், கவாஸ்கர், என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார். பின்னர் பேங்கில் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்துள்ளார்.

    அப்போது மகேஸ்வரி மூதாட்டியின் பின்னால் பதிவெண் இல்லா மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி சத்தம் ேபாட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிச் சென்றவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர். 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பொதுமக்களின் தேவை வலைதள புகார் மையத்தை தொடங்கியுள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோதமான செயல்கள் பற்றிய தகவல்களை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்ட வைகளை பற்றி காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சமூக வலைதள முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் எண் 7358154100 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    இதில் புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் சமூக வலைதள கணக்கு மற்றும் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

    சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அய்யம்பெருமாள் என்பவரது மகன் பிரகாஷ் என்பவருடன் தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனது தம்பி (16) என்பவரை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருந்த சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கைகளால் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து தண்டலை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்செல்வம், லோகேஷ், பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், சரண் உள்ளிட்ட 12 பேர் மீதும், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த மணி, பிரகாஷ், விக்னேஷ், தங்கபாலு, கண்ணன், கதிர் உள்ளிட்ட 13 பேர், ஆக மொத்தம் 25 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் 2 மைனர்கள் மற்றும் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (18), சரண் (18), தண்டலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19), விக்னேஷ் (19), தங்கபாலு (20), கண்ணன் (18), கண்ணன் (43) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சித்தேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புது வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார்.
    • சவுமியா நாராயணன் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உடையானந்தல் பகுதியைச் சேர்ந்தவர்சவுமியா நாராயணன் (வயது 30). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்தார்.

    இன்று காலை வீடு பாதி அளவு முடிந்த நிலையில் வீட்டின் சுவற்றிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. இதனால்சவுமியா நாராயணன் வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது. உடனே சவுமியா நாராயணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.

    இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுமியா நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
    • விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் உர நிறுவன நிலை யங்களில் யூரியா 2 ஆயிரத்து 558 மெட்ரிக் டன், டிஏபி1,243 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,113 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 679 மெட்ரிக் டன்மற்றும் காம்ப்ளக்ஸ் 3,424 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களு க்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு விற்பனை நிலை யங்களில் அரசு நிர்ண யித்த விலையில் மட்டும் விற்பனை விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி உமா மகேஸ்வரி (வயது 30) இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து விட்டு வழக்கமாக வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் உறங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டி திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல் அருகில் உள்ள மற்றொருவர் பட்டியிலும் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
    • செந்தில்குமார் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் பகுதி யில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியாக மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை போலீ சார் மறித்து சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சங்கராபுரம் தாலுகா, மோ.வன்னஞ்சூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பதும், 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில் குமாரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ×