திருநாவலூர் அருகே புது வீடு கட்டி வந்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி

புது வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார்.சவுமியா நாராயணன் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது.
திருநாவலூர் அருகே புது வீடு கட்டி வந்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உடையானந்தல் பகுதியைச் சேர்ந்தவர்சவுமியா நாராயணன் (வயது 30). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்தார்.

இன்று காலை வீடு பாதி அளவு முடிந்த நிலையில் வீட்டின் சுவற்றிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. இதனால்சவுமியா நாராயணன் வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது. உடனே சவுமியா நாராயணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுமியா நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com