search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-Bribery Investigation"

    • பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது52). மின்வாரிய அதிகாரி.

    இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் பொன்னகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை இருப்பு ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர்.

    காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சோதனை நடத்தி இவை எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    • 7 மணி நேரம் நடைபெற்றது
    • கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் டான்போஸ்கோ நகரில் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம் உள்ளது. இதில் காவல் ஆய்வாளராக ஜெயந்தி பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கவுரி இன்று மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனை 7 மணி நேரம் நடைபபெற்றது.

    அப்ேபாது கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து ஆய்வாளர் ஜெயந்தியிடம் விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்திற்கு முறையான ரசீதுகள் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஜெயந்தி சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கெடிலம் பகுதியில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. இந்த மானிய பொருட்கள் நேற்று கெடிலம் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வந்தது. இதனை அடுத்து விவசாயிகள் தங்களது விவசாய நில சிட்டா அடங்கள் கொடுத்து அரசு மானியத்தை வாங்கி சென்றனர். இதனால் வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை டெப்போ மேனேஜர் செந்தில்நாதன் விவசாயிகளிடமிருந்து விவசாய சிட்டா நகலை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் ரூபாய் 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    இதுகுறித்து சில விவசாயிகள் கேட்டதற்கு செந்தில்நாதன் சரிவர பதில் கூறவில்லை. இதனால் விவசாயிகள் கள்ள க்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி பாலசுதர் இன்ஸ்பெ க்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆய்வின் முடிவில் வேளாண்மை துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 4,20,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வேளாண்மை துறை அதிகாரியான செந்தில்நாதனிடம் அரசு வழங்கிய மானியம் 40 ரூபாயை விட அதிகமாக விவசாயிகளிடம் பணம் வசூலித்து ரசீது இல்லாமல் மானிய பொருள்களை விற்பனை செய்ததற்கான காரணத்தை கேட்டனர். இதற்கு செந்தில்நாதன் செய்வதறியாது திகைத்து நின்றார். மேலும் போலீசார் இது குறித்து செந்தில்நாதன் மற்றும் அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×