என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு துறையினர் சோதனை
- 7 மணி நேரம் நடைபெற்றது
- கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் டான்போஸ்கோ நகரில் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம் உள்ளது. இதில் காவல் ஆய்வாளராக ஜெயந்தி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கவுரி இன்று மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனை 7 மணி நேரம் நடைபபெற்றது.
அப்ேபாது கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து ஆய்வாளர் ஜெயந்தியிடம் விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்திற்கு முறையான ரசீதுகள் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஜெயந்தி சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story