என் மலர்
ஈரோடு
கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 52 அடியை தொட்டது. வினாடிக்கு 611 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறத்தப்பட்டு உள்ளது.
அணையில் நீர் இருப்பு கருதி தண்ணீர் திறக்கப்படவில்லை. 49 அடியில் இருந்த பவானிசாகர் அணைக்கு நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் பெய்த கோடை மழையையொட்டி கடந்த 3 நாட்களாக நீர்வரத்து சிறிது அதிகரித்தது.
3 நாட்கள் பெய்த மழையால் 3 அடி உயர்ந்து அணையின் நீர் மட்டம் 52 அடியை தொட்டது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 611 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அணையின் நீர் மட்டம் குறைந்தது 60 அடியாக இருக்க வேண்டும். இதனால் கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்திருக்கிறார்கள். #tamilnews

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனக்காவலரை காட்டு யானை தூக்கி வீசியதில் வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வனப்பகுதி கேர்மாளம் வனச்சரகத்தில் வன காவலராக இருப்பவர் ராசய்யா (வயது 54). இவர் அரேப்பாளையம் வனத்தில் இன்று காலை பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்தது.
திடீரென அந்த யானை வன காவலர் ராசய்யாவை தூக்கி வீசியது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. பிறகு அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
படுகாயம் அடைந்த ராசய்யாவை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை தூக்கி வீசியதில் காயத்துடன் தப்பிய வனக்காவலரை சக பணியாளர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

கோபியில் இன்று வேதியியல் தேர்வு நடைபெறும் நிலையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி:
கோபி வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் தினேஷ்கு மார் (வயது 18). பிளஸ்-2 படித்து வந்தார். இன்று அவருக்கு வேதியியல் தேர்வு நடக்கிறது.
கடந்த 8-8-2018 அன்று தினேஷ்குமாரின் தந்தை மரணம் அடைந்தார். இதில் தினேஷ்குமார் மனம் உடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினேஷ்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ‘‘நான் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். தந்தை மரணம் என்னை வேதனையடைய செய்தது’’ என்று அவர் எழுதி உள்ளார்.

பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டு நிகழ்ச்சிகளை கருணாநிதி டி.வி.யில் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு:
பெருந்துறையில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டு பந்தலில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 117 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
நேற்றைய தினம் நடந்த எழுச்சி மிகு மாநாட்டில் ஒன்றை கூறி கொள்ள முடியவில்லை. இவ்வளவு பெரிய மாநாட்டு பந்தல் அமைய இடம் வழங்கிய உரிமையாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நேற்று மாநாட்டில் பேசிய முதன்மை செயலாளர் அண்ணன் துரைமுருகன் பேசும் போது இந்த எழுச்சி மிகு மாநாட்டை பார்க்கும் போது அடுத்த மாநாடு நடத்த இடம் கிடைக்குமா? என்று கேட்டார். அது தான் உண்மை.
மாநாடு நடத்தி முடித்த பந்தலில் இப்போது 117 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை 75 சதவீதம் கலைஞர் சென்னையில் டி.வி.யில் பார்த்து மகிழ்ந்துள்ளார். பரவசம் அடைந்துள்ளார். உடல் நலியுற்ற நிலையில் உள்ள அவருக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது.
இங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள கொடுமுடி பகுதியை சேர்ந்த தொண்டர்கள் வந்த வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆஸ்பத்திரிக்கு மு.க.ஸ்டாலின் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் தி.மு.க. மாநாட்டிற்கு வந்த நசியனூர் வேல்நகர் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ற தொண்டர் மாரடைப்பில் இறந்தார். அவரது வீட்டிற்கும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். #Tamilnews

பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று காலை 117 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுயமரியாதை இலவச திருமணங்களை நடத்தி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள பெருந்துறை சரளையில் கடந்த 2 நாட்களாக தி.மு.க. மண்டல மாநாடு நடந்து வந்தது.
மாநாட்டில் நிறைவாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் அவர் பேசினார். பேச்சியின் முடிவில் இந்த ஆட்சியை அகற்றி விரைவில் மக்களாட்சியை மலர வைப்போம் என்று கூறினார்.
மேலும் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘‘மாநாட்டில் உள்ள தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும்’’ என்று கூறினார். இன்று (திங்கட்கிழமை) காலை மாநாட்டு பந்தலில் 117 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுயமரியாதை இலவச திருமணங்களை நடத்தி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்க அதை மணமகன் மணப்பெண் கழுத்தில் கட்டினார்.
மணமக்கள் தாலி கட்டி கொண்டு மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். அவர்கள் மீது பூக்கள்தூவி வாழ்த்தி ஸ்டாலின் மணமக்களுக்கு இலவச சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணமக்கள் ஜோடி... ஜோடியாக வந்து மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தனர்.
ஒவ்வொரு மணமக்களுக்கும் ¼ பவுன் தாலிசெய்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்று ஈரோடு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு:
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டை நிறைவு செய்து நேற்று இரவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா அரசு திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது. சமஸ்கிருதத்தை புகட்டுகிறது. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் நாம் இருக்கும் வரை தமிழகத்தில் அவர்கள் கால் பதிக்க முடியாது என்பதை உணர்த்தும் மாநாடாக இது அமைந்திருக்கிறது.

லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக, உங்களில் ஒருவனாகவே நான் இருப்பேன். உங்களில் ஒருவன், உங்களால் ஒருவன், உங்களுக்காக ஒருவன். இன்று தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் சூழ்ச்சி, சூது செய்கிறது.
மிருகபலத்துடன் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா திராவிட இயக்கங்களை அழிக்க சதி செய்கிறது. ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு ஏளனம் செய்கிறார்கள். ஏகடியம் செய்கிறார்கள். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இந்த தைரியம், ஆணவம், துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?.

சில மாநிலங்களில் பண பலம், பிரித்தாளும் சூழ்ச்சி, அதிகார பலத்தால் தங்கள் ஆட்சியை கொண்டு வர பார்க்கிறார்கள். இங்கும் குதிரைபேர ஆட்சி அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி வாய்ப்பொத்தி சேவை செய்கிறது.
மனித உரிமை பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத போதிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது என்று பல்வேறு நிலைகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாக மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கிறேன். டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம்.

தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாது.
இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநாட்டு நிதியாக ரூ.5 கோடியே 10 லட்சத்தை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
தி.மு.க. மாநாட்டில் முதன்மை செயலாளர் துரைமுருகன் நேற்று பேசும்போது, மு.க.ஸ்டாலின் ராஜபாட்டை வழியாக வந்து முதல்-அமைச்சர் பதவியில் அமர்வார் என்றார்.
தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்போது மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆகி விட்டாரோ, அப்போதே தலைவர் ஆகிவிட்டார். எனவே இனிமேல் அவருக்கு வைக்கும் சுவரொட்டிகள், வாழ்த்து பேனர்களில் செயல் தலைவரே என்றுதான் இருக்க வேண்டும். தளபதியாக இருந்த அவர் தலைவராகி விட்டார் என்றும் துரைமுருகன் பேசினார்.
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பல நாடுகளுக்கு செல்ல நேரம் இருந்த பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லாதது, சிந்திக்க வேண்டியது. ஆனால், மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குரல் கொடுத்தார்.
வெளிநாட்டில் இருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வந்து, இந்தியாவில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் இன்று நமது பணத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு உடந்தையாக மத்திய அரசு செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை தட்டிக்கேட்கும் திராணி உள்ள ஒரே கட்சியாக தி.மு.க. இருக்கிறது. தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத இயக்கமாகவும், அரணாகவும் தி.மு.க. செயல்படும். இதுபோன்ற சதிகளை தகர்த்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க.வை கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் என ஈரோட்டில் நடந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.
மு.க. ஸ்டாலின் பேசுகையில், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்றார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுகவின் கொள்கையாகும். உடல் நலிவுற்று இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியால் விழா மேடைக்கு வர இயலவில்லை. கருணாநிதியின் கம்பீரக் குரலை மாநாட்டில் கேட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. விழாவில் பங்கேற்க இயலாவிட்டாலும் கோபாலபுரத்தில் இருந்து நம்மை வாழ்த்தி வருகிறார். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம். கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்போம்.

தமிழ்நாடு செழித்திட வேண்டும் என்ற நோக்கில் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநாடு வெற்றி பெற்றது போன்று ஈராடு மண்டலத்திலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். #tamilnews #MKStalin
பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #PeriyarStatue #DMKConference
சென்னை:
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளை அருகே அண்ணா நகர் பெரியார் திடலில் 2 நாட்கள் நடக்கிறது. சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டு தொடக்கவிழா நேற்று காலை நடந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மண்டல திமுக மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
* கெயில் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உடனே தடுக்க வேண்டும்.
* கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
* பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
* திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
* பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
* ஜிஎஸ்டியில் மத்திய அரசு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியம், உள்ளாட்சி தேர்தல், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன. #tamilnews #PeriyarStatue #DMKConference
காவிரி மேற்பார்வை அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் என்று ஈரோடு தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMKMaanaadu2018 #DMK
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் நடந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா எம்.பி, வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ, முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் 15 மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.
மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு தி.மு.க.வின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி விடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக் காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லிக் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு.
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்குத் தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்பிரச்சினையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க. மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறது.

இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும்.
கலைஞர் முதல்வராகவும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது, அதனைப் `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி தீரத்து விவசாயப் பெருமக்கள் மறந்துவிடவில்லை.
இன்று, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப் போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல உயிரற்ற ஒன்றை மத்திய அரசு’, கர்நாடகத் தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்தப் பச்சைத் துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், சமாதானமற்ற அழுத்தமான உறுதி காட்ட வேண்டும்.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும் வெகுமக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென இந்த மாநாடு மத்திய, மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாநாட்டில் தீர்மானங்கள் மேடையில் படிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முக்கிய பிரமுகர்கள் பேசுகிறார்கள். இரவு 8 மணிக்கு பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேருரையாற்றுகிறார். அவர் பேசி முடித்ததும் தி.மு.க. மண்டல மாநாடு நிறைவு பெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை) மாநாட்டு மேடையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 110 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணங்களை நடத்தி வைத்து அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்துகிறார். #CauveryManagementBoard #DMKMaanaadu2018 #DMK

தி.மு.க. செயல்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் நடத்திய முதல் மாநாடே ‘‘ஹவுஸ் புல்’’ ஆகிவிட்டது என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். #TrichySiva #MKStalin #DMK
ஈரோடு:
பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா எம்.பி. பேசினார். அவர் கூறியதாவது:-
செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர் ஏற்று நடத்தம் முதல் மாநாடு இந்த மாநாடு. மேலும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த மாநாடு நடப்பத மேலும் சிறப்பு வாய்ந்தது.
அண்ணாவுக்கு பெரியார் ஒரு பெட்டி சாவியை கொடுத்தார். பிறகு அந்த பெட்டி சாவியை அண்ணா, கலைஞரிடம் ஒப்படைத்தார். இப்போது கலைஞர் அந்த பெட்டி சாவியை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். அந்த பெட்டியில் சொத்து வைடூரியமாகவா இருந்தது? அது தான் இல்லை. தி.மு.க.வின் கொள்கை கோட்பாடு கட்டுப்பாடுகள் தான் இருந்தது.
தமிழகம் தற்போது நம்பி இருப்பது தி.மு.க.வை தான். தி.மு.க. நம்பி இருப்பது உங்களை. முன்னே இருக்கும் உங்களை போன்ற தலைவர்களை தான் இங்கு உட்கார கூட இடம் இல்லாமல் வெளியேயும் மக்கள் குவிந்திருக்கிறார்கள். இப்படி ‘‘ஹவுஸ் புல்’’ ஆன மாநாடும் இந்த ஈரோடு மாநாடு தான்.
மு.க.ஸ்டாலினுக்கு இரு விழிகள் உண்டு. ஒன்று கழக தோழர்கள். இன்னொன்று தமிழக மக்கள். இந்த 2 வழிகளிலும் கண்ணீர் வராமல் பாதுகாக்கப்பட வேண்டியது உங்கள் கடமை.
இப்போது டெல்லியில் அதிகளவில் உச்சரிக்கும் பெயர் மு.க.ஸ்டாலின் பெயரைத் தான். இப்படி அனைவராலும் பேசப்பட்டு வரும் அந்த தலைவர் தான் இனி நமக்கும் தலைவர் முதல்வர்.
தமிழக மாணவர்களை பயமுறுத்தும் நீட் தேர்வு அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆகும் போது ரத்து ஆகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கோட்டையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வது உறுதி.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கூறினார். #TrichySiva #MKStalin #DMK

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 2 நாட்கள் நடக்கும் தி.மு.க. மாநாடு இன்று தொடங்கியது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ. மாநாட்டு அரங்கத்தினுள் கட்சி கொடியேற்றினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்றும் (24-ந் தேதி) நாளையும் (25-ந் தேதி) நடக்கிறது.
இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
ரோமன் கட்டிட கலை வடிவில் அமைக்கப்பட்டு உள்ள மாநாட்டு திடலின் முகப்பு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. உள்ளே நுழைந்தால் மிகவும் விசாலமான இடத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர இருக்கைகள் (சேர்கள்) போடப்பட்டிருந்தன.
காலை 9 மணிக்கு மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி அரித்துவார மங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினரின் நாதஸ்வரம் மற்றும் தவிலிசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
மாநாட்டையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து குவிந்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.
இதையடுத்து தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். காலை 8 மணிக்கெல்லாம் மாநாட்டு பந்தல் நிரம்பி வழிந்தது. மாநாட்டு திடலுக்கு வெளியேயும் ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.
மாநாட்டு திடலுக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.
மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு வந்ததும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர்கள் பார்த்து மு.க. ஸ்டாலின் கை அசைத்தார். தொண்டர்களும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கோ.வி. செழியன் எம்.எல்.ஏ. மாநாட்டு அரங்கத்தினுள் கட்சி கொடியேற்றினார். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு. முத்துசாமி வரவேற்று பேசினார்.
மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கி பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் பேசினர்.
இன்று மதியம் திருச்சி சிவா எம்.பி. பேசுகிறார். பின்னர் புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகிறார். #tamilnews

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று மதியம் தி.மு.க. மண்டல மாநாட்டு பணியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயார் துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார்.
ஈரோடு:
பெருந்துறையில் நாளை தி.மு.க. மண்டல மாநாடு தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
சென்னையில் இருந்து இன்று மதியம் பெருந்துறைக்கு வருகை தந்த நடிகரும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. மண்டல மாநாடு நடக்கும் இடத்துக்கு சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள மாநாட்டின் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையை பார்வையிட்டார். அவரை மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் முத்துசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் அவரை ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து சென்று விளக்கினர். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயார் துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார்.
மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ரசித்து பார்த்தனர்.
மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் பந்தல், மேடை மிகவும் அருமையாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். #Tamilnews