search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அரசே முழு பொறுப்பு- திமுக மாநாட்டில் தீர்மானம்
    X

    பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அரசே முழு பொறுப்பு- திமுக மாநாட்டில் தீர்மானம்

    பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #PeriyarStatue #DMKConference
    சென்னை:

    ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளை அருகே அண்ணா நகர் பெரியார் திடலில் 2 நாட்கள் நடக்கிறது. சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டு தொடக்கவிழா நேற்று காலை நடந்தது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.  கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள்.  இந்த நிலையில் ஈரோடு மண்டல திமுக மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:

    * கெயில் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உடனே தடுக்க வேண்டும்.

    * கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

    * பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் 

    * திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

    * பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

    * நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

    * ஜிஎஸ்டியில் மத்திய அரசு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

    * காவிரி மேலாண்மை வாரியம், உள்ளாட்சி தேர்தல், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன. #tamilnews  #PeriyarStatue #DMKConference
    Next Story
    ×