என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. மண்டல மாநாட்டில் 117 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. மண்டல மாநாட்டில் 117 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின்

    பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று காலை 117 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுயமரியாதை இலவச திருமணங்களை நடத்தி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பெருந்துறை சரளையில் கடந்த 2 நாட்களாக தி.மு.க. மண்டல மாநாடு நடந்து வந்தது.

    மாநாட்டில் நிறைவாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் அவர் பேசினார். பேச்சியின் முடிவில் இந்த ஆட்சியை அகற்றி விரைவில் மக்களாட்சியை மலர வைப்போம் என்று கூறினார்.

    மேலும் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘‘மாநாட்டில் உள்ள தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும்’’ என்று கூறினார். இன்று (திங்கட்கிழமை) காலை மாநாட்டு பந்தலில் 117 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுயமரியாதை இலவச திருமணங்களை நடத்தி வைத்தார்.

    மு.க.ஸ்டாலின் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்க அதை மணமகன் மணப்பெண் கழுத்தில் கட்டினார்.

    மணமக்கள் தாலி கட்டி கொண்டு மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். அவர்கள் மீது பூக்கள்தூவி வாழ்த்தி ஸ்டாலின் மணமக்களுக்கு இலவச சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணமக்கள் ஜோடி... ஜோடியாக வந்து மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தனர்.

    ஒவ்வொரு மணமக்களுக்கும் ¼ பவுன் தாலிசெய்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

    திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×