என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நாட்கள் பெய்த மழையால் பவானிசாகர் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது
    X

    3 நாட்கள் பெய்த மழையால் பவானிசாகர் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது

    கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 52 அடியை தொட்டது. வினாடிக்கு 611 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறத்தப்பட்டு உள்ளது.

    அணையில் நீர் இருப்பு கருதி தண்ணீர் திறக்கப்படவில்லை. 49 அடியில் இருந்த பவானிசாகர் அணைக்கு நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் பெய்த கோடை மழையையொட்டி கடந்த 3 நாட்களாக நீர்வரத்து சிறிது அதிகரித்தது.

    3 நாட்கள் பெய்த மழையால் 3 அடி உயர்ந்து அணையின் நீர் மட்டம் 52 அடியை தொட்டது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 611 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அணையின் நீர் மட்டம் குறைந்தது 60 அடியாக இருக்க வேண்டும். இதனால் கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்திருக்கிறார்கள். #tamilnews
    Next Story
    ×