என் மலர்tooltip icon

    ஈரோடு

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோவுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.
    ஈரோடு:

    உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்திற்கும், கெயில், பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் விவசாயிகள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    உயர் மின் கோபுரங்களால் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை. மாறாக விவசாய விளைநிலத்தில் மின்கோபுரங்கள் அமைப்பதை மட்டுமே எதிர்த்து வருகின்றோம். சாலையோரத்தில் கேபிள்கள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இக்கோரிக்கையை ஏற்க மத்திய, மாநில அரசுகள் மறுத்து வருகின்றது.

    விவசாய விளைநிலத்தை கூறு போட வேண்டும் என்பது மட்டுமே அரசுகளின் நோக்கமாக உள்ளது. இதற்கு வசதியாக இந்திய தந்தி சட்டத்தை பயன்படுத்தி நிலத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் விவசாயத்தொழில் என்பது முற்றிலும் அழிந்து வாழ்வாதாரத்திற்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலை வந்துவிடும். எனவே உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கெயில், பாரத் பொட்ரோலியம் ஐடிபி எல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய கூட்டமைப்பினர் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உயர்மின் கோபுரம்

    இதன்படி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 3 நாட்களுக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்தில் செயல்பாட்டில் உள்ள உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், வருட வாடகையும் வழங்க வேண்டும், விளைநிலங்களுக்கு பதிலாக சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும்,.

    ஐடிபிஎல் திட்டத்தினை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமைகளை கடுமையாக பாதிக்கும் இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளது. பாராளுமன்றம் நடந்து வரும் நிலையில் நாட்டின் கவனத்தை ஈர்க்க இப்போராட்டம் பயனுள்ளதாக இருக்கும். போராட்ட முடிவில் மத்திய மின்சார துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் துறை, சட்டத்துறை அமைச்சர், நிதி ஆயோக் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற எம்பிக்களுடன் சென்று மனு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    தற்போது விவசாயிக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் குழாய் அமைக்கும் திட்டம், கெயில் திட்டம், உயர் மின் கோபுரம் பதிக்கும் திட்டம் போன்ற திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை வைத்து தான் தற்போது விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தந்தி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

    இதே போன்று 1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெட்ரோலியம் தாதுப்பொருட்கள் குழாய் பதிக்கும் சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்ற தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அந்தியூர் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 39). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அழகேசனுக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கவிதா கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் .

    இதையடுத்து அழகேசன் சித்தோடு அடுத்த ராயபாளையம் புதூரில் தங்கி தறி டோனில் தறி ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அழகேசன் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அழகேசன் தூக்குமாட்டி தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோட்டில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்களில் சிலர் திருட்டு வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்புகூட ஈரோடு வந்த அரசுபஸ்சில் ரூ.3½லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டையை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதாப்மாஜி, பரஸ்தீன்ஜனப், அனில்மயூரா, சரத்மாஜி உள்பட 5  பேரை கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    இதற்கிடையே ஈரோடு நசியனூர்ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு நேற்று 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.

    கடைக்கு வந்த அவருக்கும் கடைக்காரருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அந்த வடமாநில வாலிபர் அருகில் உள்ள மற்றொரு கடைக்கு சென்றார். அந்த கடைக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டார்.

    இதை கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வடமாநில வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில்அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக் கப்பட்டு உள்ளது.

    இறந்த வடமாநில வாலிபர் பெயர் விவரம் தெரிய வில்லை. போதையில் ரகளை செய்ததால் அவரை சிலர் தாக்கியதில் அவர் இறந்திருக்ககூடும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, “வடமாசில வாலிபர் இப்போதைக்கு மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் இன்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார்? என தெரியவரும் இதனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்“ என்று கூறினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே போலீசார் போல் நடித்து நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து 3½ கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை பெருந்துறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பூத்தானங்கடியை சேர்ந்த முகமது என்பவரது மகன் அன்வர் சதர்த்(38). இவர் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது காரில் டிரைவர்கள் சிகாப், முனீர் மற்றும் நிசாத் ஆகியோர் மூலமாக 3½ கோடி பணத்தை சென்னை பாரிஸ் கார்னரில் இருந்து தனது சொந்த ஊரான கேரளாவுக்கு கொண்டு செல்ல கொடுத்து விட்டுள்ளார்.

    இந்த டிரைவர்கள் மூவரும் காரில் ஏப்ரல் 4-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே வந்த போது அங்கு இரண்டு காரில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் அந்த காரை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என கூறி காரை சோதனை செய்வது போல் நடித்து டிரைவர்கள் மூவரையும் கைவிலங்கிட்டு சற்று தொலைவில் இறக்கி விட்டு விட்டு அந்த காரை கடத்தி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசில் அன்வர் சதர்த் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டுபிடிக்க பெருந்துறை டிஎஸ்பி ராஜாகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே பெருந்துறை, போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார்களில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அவர்களிடம் மேலும் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசரணையில் கடந்த 4-ம் தேதி காரில் வந்த டிரைவர்களிடமிருந்த இருந்த 3½ கோடி பணத்தை கொள்ளை அடித்ததாகவும் கொள்ளையடித்த பணத்தினை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டதாகவும் கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம், செம்புமுக்கு பகுதியை சேர்ந்த ஜோபி தாமஸ் (39), கோழிக்கோடு செலவூர் பகுதியை சார்ந்த முரளிதரன்,(35) மற்றும் அலியார் (48)என்றும் தெரிந்தது.

    மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 31 லட்சம் ரொக்கம் மற்றும் மூன்று சொகுசு கார், ஒரு புல்லட் ,ஆகியவற்றையும் பறிமுதல் செய்து பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி அவர்கள் 3 பேரையும், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    அதன் பேரில் அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    கவுந்தப்பாடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 37). இவர் அரசு மருத்துவமனை வீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    ராஜேஸ்குமார் தனக்கு அரசியல் கட்சியினரை நன்கு தெரியும் என கூறி அரசு வேலை மற்றும் இடம் மாறுதல் செய்து தருவதாக பலபேரிடம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்ததாக கூறப்டுகிறது.

    சலங்கபாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (21) என்பவரிடம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலை வாங்கிதருவதாக கூறி 40 ஆயிரமும், தினேஸ்வரன் நண்பர் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த கோகுல் (22) என்ற இளைஞரிடம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 60 ஆயிரம் பணம் பெற்று கொண்டார்.

    அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த ராஜேஸ்குமார் தனது கையெழுத்திட்ட பூர்த்தி செய்யாத காசோலை மற்றும் பத்திரங்களை கொடுத்தார். இதை நம்பி பலரும் ராஜேஸ்குமாரை அனுகி தங்களுக்கும் தனது மகன் மற்றும் மகள்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்குமாறு பல லட்சங்களை கொடுத்தனர்.

    பணம் கொடுத்த தினேஸ்வரன் மற்றும் கோகுல் இருவரும் பல மாதங்கள் ஆகியும் இதுவரை வேலை வாங்கி தராததால் ராஜேஸ் குமாரிடம் தொடர்ந்து வேலை எப்போது கிடைக்கும் என்று கேட்டு வந்தனர்.

    மேலும் ராஜேஸ்குமார் மீது சந்தேகம் அடைந்து பூர்த்தி செய்யாத காசோலையை உரிய வங்கியில் கொடுத்து பணம் கேட்ட போது அவரது வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். தினேஸ்வரன், கோகுல் இருவரும் ராஜேஸ்குமார் தங்களை ஏமாற்றியதை அறிந்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஸ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தகவல் அறிந்த பணம் கொடுத்த மற்றவர்கள் போலீஸ் நிலையம் சென்று பணம் பெற்று தர வலியுறுத்தினர்.

    ராஜேஸ்குமார் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்தவர்களிடமும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    காவிரியில் வெள்ளம் வந்தால் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா? என கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்ற செய்திகள் வருகிறது. எதிர்வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்பு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் வந்தது போல காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடவும் வாய்ப்பிருக்கிறது.

    கர்நாடகத்தை தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டுமென்று ஒருபுறம் போராடுகிறோம். மழை வர வேண்டுமென்று ஒரு பக்கம் பூஜைகள் நடத்துகின்றோம். ஆனால் இப்போது காவிரியில் உபரிநீர் வந்தால் அதை கடலில் கலக்காமல் சேமித்து வைப்பதற்கு என்ன ஏற்பாடுகளை தமிழகம் செய்திருக்கிறது? சென்ற முறை காவிரியில் உபரிநீர் வந்து கடலில் கலந்து ஒரு வருடத்தை தாண்டிவிட்டது.

    தண்ணீர்

    இந்த ஓராண்டு காலத்தில் திரும்பவும் அந்த நிலை வந்தால் கடலில் கலக்காமல் உபரிநீரை எப்படி சேமிக்கலாம் என்பதற்காக என்ன ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை செய்திருக்கிறது? இதை கண்டிப்பாக தமிழக மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை இதை தெளிவுப்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை செயல்படாததற்கு தமிழக மக்கள் பாதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஓராண்டில் தாங்கள் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    5 மாதங்கள் மாயமாகி இருந்த முகிலன் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியிட்டார்.

    அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது திடீரென முகிலன் மாயமானார். சுமார் 5 மாதங்கள் அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 6-ந் தேதி திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் மீட்கப்பட்டார். தற்போது பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியது எப்படி என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    முகிலனின் சொந்த ஊரான சென்னிமலையில் அவருடைய மனைவி பூங்கொடி வசித்து வருகிறார். அவருடைய மகன் கார்முகில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களுடைய செல்போன்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். மேலும் ஒட்டுமொத்த முகிலனின் குடும்பத்தையும் தங்களுடைய கண்காணிப்பில் கொண்டு வந்தார்கள்.

    இது தவிர சென்னிமலையில் உள்ள முகிலனின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களையும் கண்காணிக்க சில நாட்கள் மாறுவேடத்தில் அங்கேயே தங்கியிருந்தார்கள். அப்போது வேறு செல்போன் எண்களில் இருந்து முகிலன் மற்றவர்களின் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் உயிரோடு இருப்பது உறுதியானது.

    அதன்பின்னர் செல்போன் சிக்னல்களை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கிவிட்டார்கள். இந்த நிலையில்தான் முகிலன் பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னல் திருப்பதியில் காட்டியது. உடனே திருப்பதி போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உஷார் படுத்தினார்கள்.

    இதற்கிடையே தன்னை போலீசார் மோப்பம் பிடித்துவிட்டதை முகிலனும் அறிந்துகொண்டார். உடனே திருப்பதி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த ஒரு ரெயில் என்ஜின் முன்புறம் அமர்ந்துகொண்டு கூடங்குளம் அணு உலைக்கும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ரெயில்வே போலீசார் முகிலனை தண்டவாளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கி இழுத்து வந்து விசாரித்தார்கள். அப்போது அவர்தான் முகிலன் என்று தெரிந்தது. உடனே அவரை வேலூருக்கு அழைத்து சென்று ஒப்படைத்தார்கள். அவர்கள் முகிலனை சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

    கைதான முகிலன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தான் சிலரால் கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். அப்படி கடத்தப்பட்டார் என்றால், அவரை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. மேலும் முகிலன் மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். அதற்காகத்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள தலைமறைவாக இருந்து அவர் நாடகம் ஆடினாரா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

    சி.பி.சி.ஐ.டி. போலீசில் முகிலன் உண்மையான வாக்குமூலம் அளித்தால்தான் இத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

    ஈரோடு அருகே பஸ்சில் 43 கிலோ கஞ்சா கடத்தி கைதான வடமாநில இளைஞர்கள் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த 5 பேரிடம் சந்தேகப்படும்படி மூன்று மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மூன்று மூட்டைகளில் மொத்தம் 43 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் கண்ஜாம் அருகே உள்ள தன்திலன் பகுதியை சேர்ந்த பவஸ்தின் ஜனா (வயது29), கஜபதி ராய் பங்கா பகுதியைச் சேர்ந்த பிரதாப் மாஜி (26), அனில்மைர (19), ராய கோடா கோளா பகுதியை சேர்ந்த சரத் மாஜி (19) மட்டும் ராய் பங்கா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி கோவைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் முதன் முதலில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 5 பேரில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதால் அந்தச் சிறுவன் கோவை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
    அந்தியூர் அருகே மீனவர் வலையில் பெருமாள் சிலை சிக்கியதால் அது திருடப்பட்டு ஆற்றில் போடப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கீழ்வானியில் பவானி ஆறு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் ஆப்பக் கூடல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 25), கார்த்தி (33), ஆனந்தகுமார் (25), அருள் (28) ஆகிய 4 பேர் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    வீசிய வலையை எடுத்த போது அது வரவில்லை. மிகவும் கனமாக இருந்தது. எனினும் 4 பேரும் சேர்ந்து இழுத்தனர்.

    மீன் வலையில் சிக்கிய சிலையை மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது வலையில் வெண்கலத்தாலான ஒரு அடி உயர பெருமாள் சிலை இருந்தது. இதை கண்ட மீன் பிடித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிறகு அந்த சிலையை அவர்கள் அந்தியூர் மண்டல துணை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    இந்த சிலையை அந்த பகுதியில் உள்ள கோவிலில் இருந்து யாராவது திருடி கொண்டு ஆற்றில் வீசி விட்டு பிறகு எடுத்து கொள்ளலாம் என போட்டு சென்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது குறித்து சிலை திருட்டு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி எந்த கோவிலிலாவது சிலை மாயமாகி உள்ளதா? என விசாரித்து வருகிறார்கள். 

    கவர்னர் கிரண்பெடி கொடுக்கும் தொல்லையை எதிர்த்து போராடும் சக்தி எங்களிடம் உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பரிசுகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது. மக்கள் விரும்பாத திட்டத்தை எதிர்ப்போம். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி எங்களுடைய அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக இருக்கிறார். அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். அதிகாரம் இல்லாமல் அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதை கண்டித்து அவருக்கு கடிதம் எழுதினேன்.

    ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் கவர்னர் கிரண்பெடி செவிசாய்ப்பதாக இல்லை. அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி கிரண்பெடி செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். எனவே புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளரான வைத்தியலிங்கம் எம்.பி. 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அதற்கு உதாரணம். எங்களது ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து உள்ளனர். இதை புரிந்து கொள்ளாமல் கவர்னர் கிரண்பெடி தொல்லை கொடுக்கிறார். அவரை எதிர்த்து போராடும் சக்தி எங்களிடம் உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

    கவர்னர் கிரண்பேடி

    நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கட்சி பதவியை ராஜினாமா செய்தார். அவரை சந்தித்து கட்சி பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் சக்தி ராகுல்காந்தியிடம் உள்ளது. எனவே மீண்டும் அவரை சந்தித்து பேச உள்ளேன்.

    இவ்வாறு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

    சென்னிமலை அருகே தண்ணீர் தேடி வந்த மான்கள் கிணற்றில் விழுந்தது. இதில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தது. மற்றொரு குட்டி மானை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மான்கள் சுற்றி வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் அவற்றிற்கு வனத்துறையினர் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று சென்னிமலை அருகே ஈங்கூரிலிருந்து சிப்காட் செல்லும் வழியில் காந்தி நகர் என்ற இடத்தில் கெட்டிமுத்து என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு 2 பெண் மான்கள் 1 பெண் குட்டி மானுடன் தண்ணீர் தேடி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக 3 மான்களும் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த அடிபட்டு இரண்டு மான்கள் இறந்துவிட்டது. குட்டி மான் மட்டும் கத்தியபடி இருந்துள்ளது.

    உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்னிமலை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் உத்தரவின்பேரில் வனவர் விஜயகுமார் வனக்காப்பாளர்கள் நாகராஜ், தேவராஜ், விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது இரண்டு மான்கள் இறந்து கிடந்தது.

    ஒரு குட்டிமான் மட்டும் உயிருடன் இருந்தது. அந்த மானை மீட்டு ஈங்கூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கிணற்றில் விழுந்த 3 மான்களும் பெண் மான்கள் ஆகும்.
    தாளவாடி அருகே ரூ.1 லட்சம் பணத்துக்காக மகள் மற்றும் பேத்தியை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. இவரது மனைவி ராஜம்மா. இவர்களுக்கு கீதா என்ற மகளும் மாதேவ பிரசாத் என்ற மகனும் உள்ளனர். நாகண்ணா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜம்மா மற்றும் மகள் கீதாவுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தாய்- மகள் இருவரும் உடல் கருகி பலியானார்கள். அவர்கள் உடல்கள் முற்றிலும் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் தாளவாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் ராஜம்மா கணவர் நாகண்ணா இறந்த பின் தனது மகன் மதேவபிரசாத் மற்றும் மகள் கீதாவுடன் தனது தந்தை வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். தன்னிடம் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து வைத்தார்.

    இந்த நிலையில் தந்தை வீட்டில் எத்தனை நாட்கள் இருப்பது என எண்ணிய ராஜம்மா வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக தந்தை வீட்டில் இருந்து மகள், மகனுடன் வெளியே வந்து தனது சொந்த இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். குடிசை வீட்டில் எவ்வளவு நாளைக்கு இருப்பது வீடு கட்டி அதில் வசிக்கலாம் என ராஜம்மா முடிவு செய்தார். இதற்காக தனது தந்தையிடம் கொடுத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை கேட்டார். ஆனால் அந்த பணத்தை அவரது தந்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

    ராஜம்மா தொடர்ந்து தந்தையிடம் பணத்தை கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை தனது உறவினர்கள் உதவியுடன் ராஜம்மா மற்றும் கீதாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தொடர்ந்து அதிகாலையில் குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். பிறகு வீடு தீ பிடித்து எரிகிறது என நாடகம் ஆடியது தெரியவந்து.இதையடுத்து ராஜம்மாவின் தந்தை சிக்குமாதேகவுடா உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×