என் மலர்
செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 39). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அழகேசனுக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கவிதா கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் .
இதையடுத்து அழகேசன் சித்தோடு அடுத்த ராயபாளையம் புதூரில் தங்கி தறி டோனில் தறி ஒட்டும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அழகேசன் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அழகேசன் தூக்குமாட்டி தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






