search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி (கோப்பு படம்)
    X
    பண மோசடி (கோப்பு படம்)

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி - வாலிபர் கைது

    கவுந்தப்பாடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 37). இவர் அரசு மருத்துவமனை வீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    ராஜேஸ்குமார் தனக்கு அரசியல் கட்சியினரை நன்கு தெரியும் என கூறி அரசு வேலை மற்றும் இடம் மாறுதல் செய்து தருவதாக பலபேரிடம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்ததாக கூறப்டுகிறது.

    சலங்கபாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (21) என்பவரிடம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலை வாங்கிதருவதாக கூறி 40 ஆயிரமும், தினேஸ்வரன் நண்பர் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த கோகுல் (22) என்ற இளைஞரிடம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 60 ஆயிரம் பணம் பெற்று கொண்டார்.

    அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த ராஜேஸ்குமார் தனது கையெழுத்திட்ட பூர்த்தி செய்யாத காசோலை மற்றும் பத்திரங்களை கொடுத்தார். இதை நம்பி பலரும் ராஜேஸ்குமாரை அனுகி தங்களுக்கும் தனது மகன் மற்றும் மகள்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்குமாறு பல லட்சங்களை கொடுத்தனர்.

    பணம் கொடுத்த தினேஸ்வரன் மற்றும் கோகுல் இருவரும் பல மாதங்கள் ஆகியும் இதுவரை வேலை வாங்கி தராததால் ராஜேஸ் குமாரிடம் தொடர்ந்து வேலை எப்போது கிடைக்கும் என்று கேட்டு வந்தனர்.

    மேலும் ராஜேஸ்குமார் மீது சந்தேகம் அடைந்து பூர்த்தி செய்யாத காசோலையை உரிய வங்கியில் கொடுத்து பணம் கேட்ட போது அவரது வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். தினேஸ்வரன், கோகுல் இருவரும் ராஜேஸ்குமார் தங்களை ஏமாற்றியதை அறிந்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஸ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தகவல் அறிந்த பணம் கொடுத்த மற்றவர்கள் போலீஸ் நிலையம் சென்று பணம் பெற்று தர வலியுறுத்தினர்.

    ராஜேஸ்குமார் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்தவர்களிடமும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×