என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சாவியை மீண்டும் பிச்சாவரம் சமஸ்தானத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சோழ மன்னர் வம்சத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. நட்சத்திர ஓட்டல் போன்று மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் செய்தனர். இதன் விளைவாக நடராஜர் கோவில் தீட்சிதரான பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனாலும் தீட்சிதர்கள் மீது பல்வேறு தரப்பினர் புகார் மனுக்களை சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே செல்லப்பேட்டையில் வசித்து வரும் பிச்சாவரம் சோழ சமஸ்தானமான சூரப்பபுலிக்குத்தி சோழமன்னர் வம்சத்தை சேர்ந்த மன்னர் மன்னன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையர்களான சோழர்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டது. கோவிலை பராமரிக்க மன்னர்களால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிலங்கள் வி.எஸ்.டி. அறக்கட்டளை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம்தான் தீட்சிதர்களுக்கு உணவு, பராமரிப்பு தொகையான வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் பிச்சாவரம் தீவுக்கோட்டை அரண்மனையில்தான் நடராஜர் கோவில் சாவி இருந்தது. காலையில் கோவிலை திறப்பதற்கு குதிரைபல்லக்கில் வந்து சாவியை பெற்றுசென்று பின்னர் இரவில் மீண்டும் அரண்மணைக்கு வந்து சாவி ஒப்படைக்கப்பட்டது.

    எனவே மீண்டும் அதே நடைமுறையை கடைப்பிடித்து பிச்சாவரம் அரண்மனைக்கு சாவியை கொண்டுவரவேண்டும். கோவில் ஆகம விதிமீறலுக்கு காரணமான பொதுதீட்சிதர்கள் மற்றும் காரிய கமிட்டியில் உள்ள 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவிலை அரசுடமையாக்கி பிச்சாவரம் சோழ சமஸ்தானத்தை சேர்ந்தவரை நிரந்தர அறங்காவலராகவும், பிச்சாவரத்துக்குட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறையினரை அறங்காவலர்களாகவும் நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு ஏற்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11-ந் தேதி சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. இதையொட்டி நட்சத்திர ஓட்டல்கள் போன்று ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில் புனிதம் கெட்டு விட்டதாக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருமண ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆனாலும் கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதோடு சிதம்பரம் கோவிலில் நடந்த திருமணத்தை கண்டித்தும், கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 11.30மணி அளவில் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடம்பர திருமண நடத்த காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    சிதம்பரம் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகள் அகற்றப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கட்சியினர் கோ‌ஷம் எழுப்பினர். 

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுவாதி ரத்னா நேரில் ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 45-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து பலர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது 9 பேர் டெங்குகாய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் வந்து திடீரென்று ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் அரசு ஆஸ்ப்த்திரியில் உள்ள காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பிரிவுகளை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு  படுக்கை வசதி உள்ளதா? மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா, அதிக அளவில் நோயாளிகள் வந்தால் இடவசதி உள்ளதா, காய்ச்சலில் வரக்கூடிய பொதுமக்களின் ரத்தப் பரிசோதனை உடனடியாக கண்காணிக்கப்படுகிறதா, நோயாளிகளுக்கு சிகிச்சை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் டாக்டர்களிடம் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். 
    விருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம், 

    விருத்தாசலம் 33-வது வார்டு சித்தலூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் இருந்து பொதுக்குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது

    இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடைந்த குழாயை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் சித்தலூர் பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றும், விளை நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று காலை சித்தலூர் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், எங்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு போலீசார், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 5-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55) கூலி தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் நேற்று மாலையில் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றாள்.

    அப்போது இதை அறிந்த கூலி தொழிலாளி சேகரும் கரும்பு தோட்டத்திற்கு பின்தொடர்ந்து சென்றார். பின்பு அவர் அங்குநின்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பின்பு அந்த சிறுமி வீட்டுக்கு அழுதுகொண்டே சென்றாள். வீட்டுக்கு சென்றதும் நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினாள்.

    இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி சேகரை தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது காதலி கைக்குழந்தையுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவிடம் மனு கொடுத்தார்.
    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகள் மணிமொழி(வயது 20). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் விருத்தாசலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதனை கிராமத்தை சேர்ந்த எனது மாமன் ராஜேந்திரன் மகன் ராகுல்ராஜ்(26) என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி என்னிடம் பழகி வந்தார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்.

    இப்படி ஒருநாள் வீட்டுக்கு வந்த ராகுல்ராஜ் என்னை வலுகட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதை வைத்து மிரட்டியே தொடர்ந்து அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதை ராகுல்ராஜிடம் தெரிவித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.

    இதன் பின்னர் நானும், எனது பெற்றோரும் ராகுல்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறினோம். ஆனால் அவர்களும் என் மகனை திருமணம் செய்துகொள்ள உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறி என்னை திட்டி அவமானப்படுத்தினர். இதற்கிடையே கடந்த 29-8-2019 அன்று எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பிறகும் நான் ராகுல்ராஜ் வீட்டுக்கு சென்றேன். அப்போதும் அவர்கள் என்னை அசிங்கமாக திட்டி மிரட்டி அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வீண் அலைக்கழிப்பு செய்தனர்.

    தற்போது ராகுல்ராஜூக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். எனவே திருமண ஆசை காட்டி என்னை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய ராகுல்ராஜ் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    குறிஞ்சிப்பாடி:

    குள்ளஞ்சாவடி அருகே கருப்பஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிவாரத்தினம் (வயது 31). விவசாயி. இவர் அதே ஊரில் தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றார். பின்னர் அவர் பூச்சி மருந்து தெளிக்க அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பாறையில் மோதியதில் படுகாயம் அடைந்த சிவாரத்தினம் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சிவாரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதையறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து அவரது தாய் தமிழரசி அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய போலீஸ்காரர் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் தச்சுவேலை செய்து வருகிறார். 

    இவர் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு தனது நண்பர் மூர்த்தியுடன் வந்து கொண்டு இருந்தார். வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வேப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சங்கர் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த மூர்த்தி முன்னால் நின்ற லாரி மீது மோதாமல் இருப்பதற்கு  மோட்டார் சைக்கிளை சாலை ஒரம் நிறுத்த முயன்றார். 

    அப்போது போலீஸ்காரர் ஜெயபால் கையால் மறித்தும் நிற்கவில்லை என்று கூறி லத்தியால் மாற்றுத்திறனாளி சங்கரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சங்கர் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் லத்தியால் தாக்கிய நடத்திய ஜெயபால் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
    பெண்ணாடம் அருகே தனது வீட்டு முன்பு செல்போனில் பேசிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கொத்தட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது.

    பின்னர் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டின் மீது மோதி நின்றது. அப்போது போனில் பேசிக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் லாரியின் அடியில் சிக்கினார். அவர் உயிர் பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இடிபாடுகளுக்குள் சிக்கிய கோபாலகிருஷ்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்டு பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிதம்பரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கன்னி மேடு குறுக்கு ரோட்டில் பகுதியில் உள்ள குடோனில் குட்கா, பான்பராக், கூல் லிப்,ஆர்.எம்.டி.,ஹன் பதுக்கி விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் முருகன்,ராஜா, தாலுகா நாகராஜன்மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்னர் அங்கு வெவ்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் நைலான் மற்றும்கோணி சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டியில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். 

    குடோனில் மறைத்து போதை பொருட்கள் வைத்திருந்தாக சிதம்பரம் மாலைகட்டி தெருவை சேர்ந்த நைனாராம்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்கோவிலில் திருமணம் விழா சர்ச்சையை தொடர்ந்து அந்த கோவிலை அரசு கையகபடுத்த வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்கோவில் உள்ளது. இங்கு ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு அதிபரின் இல்ல திருமண விழா கடந்த 11-ந் தேதி நடந்தது. இது பக்தர்களுக்கு இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதோடு பல்வேறு இந்து அமைப்பினரும் இந்த திருமண விழாவை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக திருமணத்தை நடத்திய பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

    இந்த நிலையில் வல்லம் படுகை நடராஜர் தீர்த்தவாரி கட்டளை தாரரும், சிதம்பரம் நகராட்சி முன்னாள் தலைவருமான சவுந்திர பாண்டியன் சப்-கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆடம்பர திருமணத்தால் புனித தன்மை கெட்டுவிட்டது. எனவே திருமணத்திற்கு அனுமதி அளித்த தீட்சிதர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்யவேண்டும். கோவில் வருமானத்திற்கு உரிய கணக்கு வழக்கு எதுவும் இல்லை. எனவே அதனை தணிக்கை செய்து சிதம்பரம் கோவிலை கையகபடுத்த அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும்.

    கோவிலை வைத்து ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

    தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 10 நாட்களில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    இதேபோல இந்து மக்கள் கட்சியினரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவை சந்தித்து தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாமி சிலை வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரியநாச்சிகிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. இதையொட்டி அந்த கோவில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு தரப்பினர் தாங்கள்தான் புதிதாக கோவில் கட்டுவோம் என்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் திட்டக்குடி தாசில்தார், விருத்தாசலம் உதவி கலெக்டர் ஆகியோர் தனித்தனியாக சமாதான கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்திலும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விருத்தாசலம் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இந்த வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை அழைத்து அவர் மூலம் அந்த கோவிலில் சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரையும் அழைத்து வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் எச்.ராஜாவை வரவிடாமல் கருப்பு கொடி காட்டி தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் அரியநாச்சி கிராமத்துக்குள் செல்லாமல் திரும்பினார்.

    இதையடுத்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ உத்தரவின் பேரில் பிரச்சனைக்குரிய சாமி சிலையை அரசு கட்டுப்பாட்டில் உரிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரியநாச்சி கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.

    அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றனர்.

    இதையறிந்தும் தாங்கள்தான் கோவில் கட்டுவோம் என்று கூறிய ஒரு தரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சாமி சிலையை பொது இடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாமி சிலை குறிப்பிட்ட பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையறிந்ததும் ஒரு பிரிவினர் மீண்டும் அங்கு திரண்டு வந்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை அகற்றி வேறொரு இடத்தில் வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த சாமி சிலையை மீட்டு குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×