search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாற்றுத்திறனாளி சங்கர்.
    X
    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாற்றுத்திறனாளி சங்கர்.

    மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய போலீஸ்காரர் ஆயுத படைக்கு மாற்றம்

    விருத்தாசலம் அருகே மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய போலீஸ்காரர் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் தச்சுவேலை செய்து வருகிறார். 

    இவர் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு தனது நண்பர் மூர்த்தியுடன் வந்து கொண்டு இருந்தார். வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வேப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சங்கர் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த மூர்த்தி முன்னால் நின்ற லாரி மீது மோதாமல் இருப்பதற்கு  மோட்டார் சைக்கிளை சாலை ஒரம் நிறுத்த முயன்றார். 

    அப்போது போலீஸ்காரர் ஜெயபால் கையால் மறித்தும் நிற்கவில்லை என்று கூறி லத்தியால் மாற்றுத்திறனாளி சங்கரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சங்கர் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் லத்தியால் தாக்கிய நடத்திய ஜெயபால் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
    Next Story
    ×