search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தீக்குளிக்க முயற்சி"

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்த கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுப்பதாக உறுதி
    • அண்ணன் வாங்கிய நகையை வாங்கி தர வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 45). இவரது அண்ணன் சந்திரசேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது 30 பவுன் நகையை அண்ணன் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வாங்கிய நகையை நீண்ட நாட்களாக சந்திர சேகர் திருப்பித்தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதிகா உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ராதிகா தனது உடலில் பெட்ரோலை ஊற் றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ராதிகா மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விபத்தில் மகன் மீது தவறு இருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக புகார்
    • கலெக்டர் சமாதானம் செய்தார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரது மனைவி கோட்டீஸ்வரி (வயது 49) என்பவர் திடீரென கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கோட்டீஸ்வரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு குடியாத்தத்தில் நடந்த விபத்தில் என்னுடைய மகன் ரவிவர்மா (26) என்பவர் பலியானார். இதில் தவறுதலாக எனது மகன் மீது தவறு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது மகன் மீது எந்த தவறும் இல்லை. இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறினார்.

    அவரை சமாதானம் செய்த கலெக்டர் முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் தீக்குளிக்கும் எண்ணத்தோடு வரக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

    குடியாத்தம் அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் குடியாத்தம் பலமனேர் சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதியில் 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு பின்னர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் குளவி மேடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தினர். அதில் குளவி மேடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறோம்.

    எங்கள் குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. கடந்த வாரம் குடியிருப்பில் பெண் ஒருவர் இறந்து விட்டார். அவரை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    எங்கள் ஊர் மக்களுக்கு சுடுகாட்டில் அடக்கம் செய்யபோதிய இடவசதி இல்லை. எனவே இந்த ஒருவரை மட்டுமே இங்கே அடக்கம் செய்து கொள்ள லாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். எங்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியுள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் மனு ஒன்று அளித்தார். அதில் குடியாத்தம் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

    • கடனுக்கு ஈடாக வீட்டை ஜப்தி செய்ய முயன்றதால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் தடுத்து நிறுத்தி அவரை அப்புறப்படுத்தி வீட்டை சீல் வைத்தனர்.

    நிலக்கோட்டை:

    செம்பட்டி மூவேந்தர்கால னியை சேர்ந்த ஜீவா மொக்கவீரம்மாள் தம்பதி யினர் சின்னாளபட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி தமிழ்செல்வியிடம் கடந்த 1997-ம் ஆண்டு கடனாக ரூ.5.5 லட்சம் பெற்றிருந்தனர்.

    இதற்கு ஈடாக மொக்க வீரம்மாள் பெயரில் இருந்த வீட்டை அடமானமாக எழுதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா இறந்துவிட்டநிலையில் கடன் கொடுத்த தமிழ்செல்வி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து மொக்கவீரம்மாள் பெயரில் இருந்த வீடு தமிழ்செல்வி பெயருக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் மாற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் வீட்டின் உரிமை யாளர் முறைப்படி வீட்டை காலிசெய்து தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் வீட்டை ஜப்தி செய்து கைப்பற்ற பிப்ரவரி 3-ந்தேதியன்று தமிழ்செல்வி, நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் உதவியுடன் வந்தனர்.

    அப்போது மொக்க வீரம்மாளும், அவரது உறவினர்கள் வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுத்தனர். இதை யடுத்து நேற்று மீண்டும் போலீசார் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். அப்போதும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 4 குடும்பத்தி னர், மொக்க வீரம்மாள் ஆகியோர் போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மொக்க வீரம்மாள் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க தற்கொலைக்கு முயற்சிசெய்தார்.

    அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையிலான போலீசார் மொக்க வீரம்மாள், அவரது உறவி னர்கள், வீட்டில் குடியிருந்த வர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சீல் வைத்தனர். வீட்டை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் , போலீசார் முன்பு எதிர்ப்புதெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீஸ் நிலையத்தின் முன்பு நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனங்குளத் தை சேர்ந்தவர் கனகசிவம் இவரது மகன் விக்கிரமாதித்தன் வயது 21 இவருக்கும் குலமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறியதால் ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கீரமங்கலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் விக்ரமாதித்தனை தேடி சென்ற போலீசார் அவரது அம்மா விஜயாவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்து விட் டதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சனையின் காரணமாக பரிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் இதுவரை திரு ப்பி கொடுக்கப்படவில்லை.

    இது குறித்து விஜயா கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்று கேட்டதாகவும் அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த விஜயா நேற்று கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித் தார்.

    இதனை கண்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி விஜயாவை காப்பாற்றினர். இதனால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரு ம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×