search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பம்
    X
    கர்ப்பம்

    விருத்தாசலம் அருகே திருமண ஆசைகாட்டி காதலியை கர்ப்பமாக்கிய வாலிபர்

    திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது காதலி கைக்குழந்தையுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவிடம் மனு கொடுத்தார்.
    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகள் மணிமொழி(வயது 20). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் விருத்தாசலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதனை கிராமத்தை சேர்ந்த எனது மாமன் ராஜேந்திரன் மகன் ராகுல்ராஜ்(26) என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி என்னிடம் பழகி வந்தார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்.

    இப்படி ஒருநாள் வீட்டுக்கு வந்த ராகுல்ராஜ் என்னை வலுகட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதை வைத்து மிரட்டியே தொடர்ந்து அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதை ராகுல்ராஜிடம் தெரிவித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.

    இதன் பின்னர் நானும், எனது பெற்றோரும் ராகுல்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறினோம். ஆனால் அவர்களும் என் மகனை திருமணம் செய்துகொள்ள உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறி என்னை திட்டி அவமானப்படுத்தினர். இதற்கிடையே கடந்த 29-8-2019 அன்று எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பிறகும் நான் ராகுல்ராஜ் வீட்டுக்கு சென்றேன். அப்போதும் அவர்கள் என்னை அசிங்கமாக திட்டி மிரட்டி அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வீண் அலைக்கழிப்பு செய்தனர்.

    தற்போது ராகுல்ராஜூக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். எனவே திருமண ஆசை காட்டி என்னை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய ராகுல்ராஜ் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×