என் மலர்
கடலூர்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
விருத்தாசலம்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருத்தாசலத்தில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. மழை நீருடன் சாக்கடையும் கலந்து நிற்பதால் பயணிகள் அவதிப்பட்டனர். செம்பலாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சித்தேரிக்குப்பம் மற்றும் அந்த வழியாக செல்லும் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதே போல கம்மாபுரம், மங்கலம் பேட்டை, ஆலடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்தது.
பண்ருட்டி, திருவதிகை, எல்.என்.புரம், அண்ணாகிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை நீடித்து வருகிறது.
கடலூர் நகர் பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்தது. இன்று 6-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குடைபிடித்த படி சென்றனர். திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், தூக்கணாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்து வருகிறது
கன மழையால் கடலூர் சித்தூர் சாலை சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
சிதம்பரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 51.90 மழை பதிவாகி உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து உள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிதம்பரம்-51.90, மே.மாத்தூர்-45, பெலாந்துறை-4.80, வேப்பூர்-38, காட்டுமைலூர்-36, கலெக்டர் அலுவலகம்-29.60, குப்பாநத்தம்-29.40, விருத்தாசலம்- 25.40, வானமாதேவி- 25, குடிதாங்கி-24.90, குறிஞ்சிப்பாடி-24, அண்ணாமலை நகர் - 21,60, லால்பேட்டை-21, கடலூர் -18.90, பண்ருட்டி-17, காட்டு மன்னார்கோவில்-16.30, புவனகிரி-16, ஸ்ரீமுஷ்ணம் -11.10, கொத்த வாச்சேரி-9, வடகுத்து-8, சேத்தியா தோப்பு-5, லக்கூர்-4.20, தொழுதூர்-4, பரங்கிப்பேட்டை-3, கீழச்செருவாய்-2 மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 527.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 44.50 அடியாக ஏரியின் நீர் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், கீழணையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 46.50 அடியாக இருந்தது. இந்நிலையில் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மதியம் முதல் வினாடிக்கு 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று 1,200 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வீராணம் ஏரியின் இன்றைய நீர் மட்டம் 46.53 அடியாகும் .
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து 56 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இன்று 57 கன அடிதண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவாசாயத்திற்கு 66 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

வங்கியின் பெயர் பலகையை தொட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி:
குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 14). இவன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்ட தினேஷ்குமார் அம்பலவாணன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, சிகிச்சை பெற்றான். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குள்ளஞ்சாவடியில் நடந்து சென்றான். அப்போது ஒரு வங்கியின் முன்பு வைத்திருந்த வங்கியின் மின்சார பெயர் பலகையை தினேஷ்குமார் தொட்டான். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவன், மயங்கி விழுந்தான். அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடல், பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தினேஷ்குமாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குள்ளஞ்சாவடியில் உள்ள வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா ஆகியோர் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறுகையில், தினேஷ்குமாரின் உயிர் இழப்புக்கு காரணமான வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தினேஷ்குமாரின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு தாசில்தார் கீதா, உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.

பெண்ணாடம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது நாசமானது.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுப்பிரமணியன்(வயது35). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டிவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணாடத்தில் உள்ள ஒரு பங்கில் டீசல் போட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சின்னகொசப்பள்ளம் கிராம பகுதியில் சென்றபோது, காரின் என்ஜீன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி உயிர் தப்பினார்.
இதனிடைய தீ கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் காரில் சுப்பிரமணியன் வைத்திருந்த ரூ.10 ஆயிரமும் எரிந்து சாம்பலானது. இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி பெண் அதிகாரியை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 28). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், சென்னை அண்ணாநகர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நித்யா (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நித்யா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அப்போது, உன்னைதான் திருமணம் செய்து கொள்வதாக காதலி நித்யாவிடம் காதலன் விஜயகாந்த் கூறினார். இதனை தொடர்ந்து அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதன் பின்னர் விஜயகாந்த், காதலி நித்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனாலும் நித்யா விடவில்லை. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். அதனை விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டார்.
காதலனை நம்பி மோசமடைந்து விட்டோமே என்று நித்யா மனவேதனையடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், நானும், எனது காதலன் விஜயகாந்த்தும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவர் என்னிடம் உல்லாசமாக இருந்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விஜயகாந்த்தை கைது செய்தனர்.
பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து விஜயகாந்த் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட 493 பேருக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரகாலமாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதன் காரணமாக ஏராளமானோருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டது.
இதனால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்பட மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
காய்ச்சலால் அவதிப்பட்ட 493 பேருக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிஞ்சிபாடியை சேர்ந்த கலா (வயது 48), கீழ்மாம்பழம்பட்டு அர்ச்சனா (13), காட்டுமன்னார்கோவில் சரவணன் (27), பாளையங்கோட்டை பரசுராமன் (20), நாராயணபுரம் பிரித்தா(15), வாழப்பட்டு சரோஜா(65), பணிக்கன்குப்பம் முருகன் (37) ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தையாக்குப்பம் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே திடீரென பன்றி ஒன்று வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக நடராஜன் அந்த பன்றி மீது மோதினார்.
இந்த விபத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் துணை மின்நிலையம் மற்றும் நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் நத்தப்பட்டு துணை மின்நிலையம் மற்றும் நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை)மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் புதுநகர், பாரதிசாலை, செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நெல்லிக்குப்பம், நத்தப்பட்டு, குமராபுரம், கங்கணாங்குப்பம், வரக்கால்பட்டு, ராமாபுரம், பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், எஸ்.புதூர், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம் மற்றும்
அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசாப்பாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர்கள் நெல்லிக்குப்பம் லீனா, கடலூர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா(32). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்– மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமதாசுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மஞ்சுளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளாவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராமதாஸ், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்த சரவணன் மகள் சபினா (வயது 21) என்ற என்ஜினீயருக்கும், சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமி மகன் பாவேந்தன் என்பவருக்கும், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தனர். மேலும் டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களையும் வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், சீர்வரிசை பொருட்களை கேட்டு சபினாவை கணவர் பாவேந்தன் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த சபினா, கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு சென்றதும், பாவேந்தன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சபினா விஷம் குடித்தார். இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாவேந்தன், அவரது தந்தை பாவாடைசாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நெய்வேலியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலி:
நெய்வேலி பெரியாக்குறிச்சியை அடுத்துகிழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. அவரது மனைவி திவ்யா (வயது27). கடந்த மாதங்களுக்கு முன்பு சிவா இறந்து போனார். எனவே திவ்யா 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்த திவ்யாவிடம் கங்கைகொண்டான் நகர அ.தி.மு.க. செயலாளர் மனோகர் வேலைவாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, ரேசன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு எனது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற திவ்யாவை அ.தி.மு.க. பிரமுகர் மனோகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மனோகரின் மனைவி மகாலட்சுமிக்கு தெரியவந்தது. அவர் எனது கணவருடன் ஏன் பழகுகிறாய் என்று கூறி திவ்யாவை தாக்கி உள்ளார்.
இதனால் மனமுடைந்த திவ்யா எலி மருந்து சாப்பிட்டுள்ளார். அவர் வாந்தி எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தார் திவ்யாவை மீட்டு உடனடியாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் திவ்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் மனோகர் மீது பாலியல் பலாத்காரம், தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அ.தி.மு.க. நகர செயலாளர் மனோகரன், அவரது மனைவியை கைது செய்ய கோரி கோஷம் போட்டனர்.
இன்று காலையும் விடுதலை சிறுத்தைகள்கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், திவ்யாவின் உறவினர்கள் மந்தாரக்குப்பம் ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அ.தி.மு.க.பிரமுகர், அவரது மனைவியை கைது செய்யக்கோரி மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர்:
கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
கடலூர் செம்மண்டலம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் தேவனாம்பட்டினம் மின்னூட்டிகளில் புதிதாக புதைவட பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நிறுவப்பட உள்ளது. இதனால் கடலூர் அண்ணாநகர், ஆர்.வி.எஸ்.நகர், எம்.ஜி.ஆர். நகர், தங்கபழம்நகர், சித்ராநகர், ராமசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
அதேபோல் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுபாளையம், வண்டிக்குப்பம், மேற்குராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் நெல்லிக்குப்பம் நகர பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவர்நகர், எவரட்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர்கள் (கடலூர்) ராமலிங்கம், லீனா (நெல்லிக்குப்பம்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.