search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட விஜயகாந்த்
    X
    கைது செய்யப்பட்ட விஜயகாந்த்

    பெண் வங்கி அதிகாரியை திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்- பண்ருட்டி வாலிபர் கைது

    வங்கி பெண் அதிகாரியை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 28). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், சென்னை அண்ணாநகர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நித்யா (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நித்யா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    அப்போது, உன்னைதான் திருமணம் செய்து கொள்வதாக காதலி நித்யாவிடம் காதலன் விஜயகாந்த் கூறினார். இதனை தொடர்ந்து அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.

    அதன் பின்னர் விஜயகாந்த், காதலி நித்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனாலும் நித்யா விடவில்லை. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். அதனை விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டார்.

    காதலனை நம்பி மோசமடைந்து விட்டோமே என்று நித்யா மனவேதனையடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், நானும், எனது காதலன் விஜயகாந்த்தும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவர் என்னிடம் உல்லாசமாக இருந்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விஜயகாந்த்தை கைது செய்தனர்.

    பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து விஜயகாந்த் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×