search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    X
    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

    கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட 493 பேருக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரகாலமாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சீதோ‌ஷ்ண நிலை மாறி உள்ளது. இதன் காரணமாக ஏராளமானோருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டது.

    இதனால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்பட மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    காய்ச்சலால் அவதிப்பட்ட 493 பேருக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குறிஞ்சிபாடியை சேர்ந்த கலா (வயது 48), கீழ்மாம்பழம்பட்டு அர்ச்சனா (13), காட்டுமன்னார்கோவில் சரவணன் (27), பாளையங்கோட்டை பரசுராமன் (20), நாராயணபுரம் பிரித்தா(15), வாழப்பட்டு சரோஜா(65), பணிக்கன்குப்பம் முருகன் (37) ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×