என் மலர்
கடலூர்
புவனகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஊர் தலைவராக இருந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பன்னீர்செல்வம் (60) என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா, ஊர் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 8.5.2005 அன்று வயலுக்கு ஏர் உழவு செய்ய சென்ற கலியமூர்த்தி, அவரது தம்பி மகன் ரவிச்சந்திரன்(25) ஆகிய 2 பேரும் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் புவனகிரி வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி கலியமூர்த்தி மகன் சாரங்கபாணி, புவனகிரி போலீசில் தன்னுடைய தந்தை மற்றும் சித்தப்பா மகன் ரவிச்சந்திரன் சாவில் மர்மம் உள்ளதாக புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீசார் விசாரணையில் திருப்தி அடையாத சாரங்கபாணி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோத தகராறில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பன்னீர்செல்வம், அன்பழகன்(64), ஓய்வுபெற்ற ஆசிரியர் ராகவன், முன்னாள் ராணுவ வீரர் நடராஜன், சிதம்பரத்தை சேர்ந்த இரும்பு ஆறுமுகம் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவர்கள் 2 பேரையும், முகத்தை மணலில் வைத்து அமுக்கி, மூச்சை திணறடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் இரும்பு ஆறுமுகம் இறந்து விட்டார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தீர்ப்பு கூறினார். அப்போது, இவ்வழக்கில் பன்னீர்செல்வம், அன்பழகன், ராகவன், நடராஜன் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.7 ஆயிரத்து 400 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.

பண்ருட்டியில் குடிபோதையில் இருந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் இந்திரா காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த முதியவர் திடீரென தான் அணிந்திருந்த கைலியை கழற்றி, ஓட்டலின் முன்புள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதாசிவம் (வயது 55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி, கீழநத்தம், வால்காரமேடு, கே.ஆடூர், சி.வீரசோழகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியது.
மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிதம்பரம் மூத்த கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அழுகிய பயிர்களுடன் நேற்று காலை சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன், நிர்வாகிகள் திருவரசு, சம்பந்தமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அங்கு வந்த சிதம்பரம் சமூக நல தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விருத்தாசலம் பகுதியில் கடந்த 1 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, கம்மாபுரம், வேப்பூர், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்த வந்த 2 புயல்களால் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நெய் பயிர்கள் அழுக தொடங்கி உள்ளது.
மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களில் தற்போது 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் நெல் மணிகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிரிடப்பட்டு இருந்து நெற்கதிர் தற்போது மழையால் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் வீணாகி வருவதால் சாப்பிடக் கூட மனம் வரவில்லை. இதனால் பொங்கல் பண்டிகையை கூட கொண்டாடவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவு செய்து உள்ளோம். தொடர் மழையினால் செலவு செய்ததற்கு கூட மகசூல் கிடைப்பது மிக கடினம்.
எனவே விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
என்.எல்.சி. அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 54). இவர் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மனிதவளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் செல்வகுமார் கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் இருந்த 29¾ பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம், 3 வெள்ளிக்கொலுசுகளை காணவில்லை. மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நோய் அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர்:
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகள் திறக்கப்படும் போது அதற்கான அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களை மட்டுமே அமரவைக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்கவேண்டும். மாணவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு இணையவழி மூலம் வகுப்புகள் நடத்தப்படவேண்டும். சத்துணவு சாப்பிடாத மாணவர்கள், வீட்டிலிருந்து உணவு எடுத்துவர வேண்டும். பள்ளியின் வழிகாட்டு நெறிமுறைகளை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கண்காணிக்க வேண்டும். விடுதியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டில் எடுத்து வரவேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
குடிநீர், உணவு போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கை குலுக்குதல், தொட்டு பேசுதல் உள்ளிட்டவற்றை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்திய வாலிபரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜி மற்றும் போலீசார் குண்டுசாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவர் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் வீராசாமி மகன் சிலம்பரசன் (வயது 33) என்று தெரிந்தது.
இதையடுத்து அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது, அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. அதை அவர் புதுச்சேரியில் இருந்து கடத்தி கடலூர் முதுநகருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் அருகே கார் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்:
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் லதீஷ்குமார் (வயது 29). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன்கள் பிரேம் (30), விஷ்ணு(18), தனுஷ் (16), ராஜேந்திரன் மகன் நாகராஜ் (31), முருகன் மகள் இந்துமதி (21), முருகன் மனைவி மனுஷா (29) உறவினர் சினேகா(18) ஆகியோர் நேற்று முன்தினம் பழனிக்கு ஒரு காரில் புறப்பட்டனர். காரை பிரேம் ஓட்டினார். இவர்களது கார், கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதில் அதிர்ச்சியடைந்த லதீஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் அலறியடித்தபடி காரை விட்டு இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. கார் தீப்பிடித்ததை அறிந்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அத்தியூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் குள்ளு மகன் மணிகண்டன்(வயது 32). இவர் வடபொன்பரப்பி ஆரம்பசுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள புதூர் ஏரி அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டன் தான் பணிபுரிந்து வந்தகாலத்தில் இதுவரை ஆம்புலன்சில் எற்றி சென்ற நோயாளிகளில் ஒருவர் கூட இறந்தது இல்லை என்றும் ஆனால் விபத்தில் அவர் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருப்பதாக கிராமமக்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். பலியான மணிகண்டனுக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் கோபிநாத்(4), ரகுநாதன்(2) என்ற மகன்களும் உள்ளனர். தற்போது சுகந்தி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விபத்து குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூரில் 17 வயது சிறுமியை திருமணத்துக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுமியை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். அதன்படி முதுநகர் மணிக்கூண்டு பஸ்நிறுத்தம் அருகே போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிறுமியுடன் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணைணயில் அவர் காணாமல்போன சிறுமி என்பதும், அந்த வாலிபர் தர்மபுரி அருகே தொப்பூரை சேர்ந்த பிரபு (வயது 23) என்பதும், இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரபு மற்றும் அந்த சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பிரபுவுக்கு முகநூல் மூலம் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபு அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மீனவர்கள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லிக்குப்பம்:
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த மூர்த்திக்குப்பத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது 23). இதேபோல் நரம்பை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார்(23). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கடலூரில் இருந்து சென்னை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று திடீரென இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவர்கள் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான கணேஷ், ஆனந்தகுமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.