என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor motorcycle crash"

    தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கிஷான்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சதீஸ் (18) ஆகிய 2 பேர் தளி அருகேயுள்ள தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்றிவு பணியை முடித்து விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக் கோட்டை அண்ணாநகர் கூட்டு ரோடு அருகேயுள்ள தனியார் சினிமா தியேட்டர் அருகே நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சதீசை மீட்டு அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் காரைக்கால் மதகடி தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மபிரபு. இவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னத்தூர் வளைவு அருகே மணல் டிராக்டர் வந்து கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்குநேர் மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே அமுதா தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த அவரின் கணவர் தர்மபிரபுவை அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் தம்பிக்கோட்டை மேலக்காடை சேர்ந்த முருகானந்தம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×