என் மலர்tooltip icon

    கடலூர்

    2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 59). இவரது மகன் தமிழ்ச்செல்வன் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரண்ராஜிடம் பணம் கடனாகப் வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று லோக சுந்தர், சரண்ராஜ் உள்பட நான்கு பேர் திடீரென்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் லோக சுந்தர், சரண்ராஜ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் இருந்த 4½ பவுன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. கடந்த 20-ந்தேதி இரவு சந்தியா திடீரென்று மயமானார். அவர் வீட்டில் இருந்த 4½ பவுன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து மோகன்ராஜ் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது மனைவியை தன்னிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்த சிதம்பரம் கீழ்கரையை சேர்ந்த ஜெயசூர்யா கடத்தி சென்றதாக கூறிஉள்ளார். இது குறித்து சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகிறார்.

    நகராட்சி மூலம் சுத்தம் செய்து அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 9-வது வார்டு கிழக்கு தெரு முழுவதும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து திட்டக்குடி நகராட்சி மூலம் சுத்தம் செய்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    தற்பொழுது கிழக்கு தெரு முழுவதும் சாக்கடையால் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுவதோடு அதின் மேல் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தக் கூடிய வகையில் கழிவு நீரை சாக்கடையை சாலையில் போட்டு சென்றுள்ள திட்டக்குடி நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்குமாறு திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினம் தோறும் குப்பைகள் அகற்றுவதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 162 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனியார் நிறுவனம் சார்பில் 335 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தல், அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளில் உரம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாத தனியார் நிறுவன டென்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டர் அருண் தம்புராஜிடம் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை என மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென்று நேரடியாக வந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது தனியார் நிறுவனம் சார்பில் பராமரித்து வரும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என கேட்டபோது 294 நபர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 41 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனம் மூலமாக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குப்பைகள் அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரம் சீரழிந்து வருகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.ஆகையால் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி எந்தெந்த பகுதியில் குப்பையில் உள்ளது என்பதனை பார்வையிட்டு அகற்ற வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்க வேண்டும். ஆகையால் துப்புரவு பணியாளர்கள் தினந் தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என்பதால் தூய்மை பணியில் சரியான முறையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தனியார் நிறுவனம் அனைத்து பணியாளர்களையும் நியமித்து சரியான முறையில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர்கள் அப்துல் ஜாபர், கிருஷ்ணராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், சங்கீதா, பார்வதி, சுபாஷிணி ராஜா, விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், சரவணன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

    கடலூர்:

    ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர்.
    • விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் அம்புஜவல்லி தம்பதியினரின் மகள் பவித்ரா ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகின்றார். இதற்கு லூசி என்று பெயரிட்டு தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல கவனித்து வருகின்றனர்.

    தற்போது லூசி கருவுற்ற நிலையில் அதற்கு வளைகாப்பு செய்ய பழனிவேல் குடும்பத்தார் முடிவு செய்தனர். லூசியை அலங்கரித்து பூ அணிவித்து, சேரில் அமரவைத்தனர். அதற்கு தங்க நெக்லசினை அணிவித்து மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.

    மேலும், லூசிக்கு பிடித்த உணவுகளை அதற்கு முன்பாக வைத்து, கருவுற்ற லூசி நல்ல முறையில் குட்டிகளை ஈன்ற வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர். இவ்விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

    வளர்ப்பு பிராணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை விளக்கும் மற்றொரு சம்பவமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. எத்தனை அறிவியல் நம்மை ஆளச் செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    லூசியின் வளைகாப்பு நிகழ்ச்சியும் அதுபோல அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியதுடன், செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டிப்-டாப் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கடலூர்:

    பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.

    அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி கடலூர் ரோடு சாமியார் தர்கா ெரயில்வே சப்வே அருகே அமைந்துள்ளது அய்யனார்கோவில்.இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக் கோவில் குலதெய்வ கோவிலாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சன்னதியில் கருங்கல்லால் ஆன விநாயகர் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த 18-ந் தேதி காலைபூஜை செய்யபூசாரிசென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.விநாயகர் சன்னதி யில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கோவில் தர்மகர்த்தா ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு ,பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் சிலையை தேடி வருகின்றனர்.

    தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குழந்தைக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் தமிழரசன்(29).பி.காம் பட்டதாரி. இவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அப் பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் தமிழரசன் அப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அப் பெண் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்துதமிழரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மிளகாய் பொடி தூவி சென்றுள்ள கொள்ளையர்கள்

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோட்டில் வசிப்பவர் பூவாராகசாமி மகன் சந்துரு (வயது 45). இவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மீதமுள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு சேதமடைந்துள்ளதால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, காலியாக உள்ள மற்றொரு கடையில் தனது மனைவி, மகனுடன் தங்கினார்.இன்று காலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதேபோல வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளதையும் கண்டார். இது தொடர்பாக சந்துரு சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு நகரின் மையப்பகுதியில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது‌.

    கடலூர்:

    இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×