search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு
    X

    பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு

    • தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் 46.50 அடியில் இருந்த நீர்மட்டத்தை ஒரு அடி குறைத்து 45.50 அடியாக நிலை நிறுத்தியுள்ளனர்.
    • ஒருவேளை கட்டுக்கடங்காத புயல், வெள்ள நீர், ஏரிக்கு வரும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற வெள்ளியங்கால் வடிகால் ஓடை கதவணை தயாராக உள்ளது.

    காட்டுமன்னார் கோவில்:

    காட்டுமன்னார் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் பிரதான வடிகாலான சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடி பகுதியில் அமைந்திருக்கும் வீராணம் புதிய கால்வாய் மூலம் வெள்ளாறு அணைக்கட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

    மேலும் வெள்ளாற்றில் இருந்து 4-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்களின் மூலம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள உள்ளூர் பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் 46.50 அடியில் இருந்த நீர்மட்டத்தை ஒரு அடி குறைத்து 45.50 அடியாக நிலை நிறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் தெரிவித்த போது, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் விதமாக ஏரியின் நீர்மட்டத்தை சமமாக வைத்துள்ளோம்.

    ஒருவேளை கட்டுக்கடங்காத புயல், வெள்ள நீர், ஏரிக்கு வரும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற வெள்ளியங்கால் வடிகால் ஓடை கதவணை தயாராக உள்ளது.

    மேலும் நடைபெறும் சம்பா சாகுபடி மற்றும் வரவிருக்கும் குறுவை சாகுபடிகளையும் கருத்தில் கொண்டு ஏரியின் நீர்மட்டத்தை பராமரித்து வருகிறோம் என்றனர்.

    ஏற்கனவே வீராணம் ஏரிக்கு வரும் மழைநீர், கீழணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×