என் மலர்
கடலூர்
- துபாயில் பாலையா கட்டிட வேலை செய்து வந்தார்.
- பாலையா மனைவி எனது கணவரை பற்றி எதும் தெரியவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 38). இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு ஏஜென்சி நிறுவனம் கூறியபடி வேலை கிடைக்கவில்லை. துபாயில் பாலையா கட்டிடவேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள நிறுவனம் பாலையாவின் பாஸ்போட்டை பறிமுதல் செய்தது. ஆனால் கடந்த வாரம் துபாய் நிறுவனம் பாலையாவிடம் நீ ஊருக்கு செல்லவேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் பெட்டியை குறிப்பிட்ட நபரிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பிய பாலையா அந்த நிறுவனம் கொடுத்த பெட்டியுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடந்த 14-ந் தேதி வந்து இறங்கினார். அப்போது சுதந்திரதின விழாவை யொட்டி பயங்கர சோதனை நடந்தது. ஆனால் பாலையாவிடம் தெரிவித்த ஒரு நபர் அங்கு வரவில்லை. எனினும் பாலையா லாபகமாக தப்பி பெட்டியுடன் ஊருக்கு திரும்பினார். அப்போது தான் வைத்திருந்த பெட்டியை கருவேப்பிலங்குறிச்சி அருகே பேரலையூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கொடுத்தார். மேலும் ஊருக்கு திரும்பியதை சொல்ல வேண்டாம் என தெரிவித்தார்.
இதனிடையே பாலையாவின் மனைவி திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் எனது கணவர் ஊருக்கு திரும்பியதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே துபாயில் இருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த கும்பலுக்கு பாலையா வேலை செய்த நிறுவனம் தொடர்பு கொண்டு பேசியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து 9 பேர் கொண்ட கும்பல் திருச்சி விமானநிலையத்துக்கு சென்றது. அப்போது பாலையா வந்த கார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அந்த டிரைவர் பேரலையூர் கிராமத்தில் பாலையாவை இறக்கி விட்டதாக தெரிவித்தனர். உடனே அந்த கும்பல் பேரலையூர் வந்தது. அங்குள்ள பாலையாவின் மாமனாரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த கும்பல் அவரை அழைத்துக்கொண்டு பாலையாவின் சொந்த ஊருக்கு சென்றனர். அங்கு பாலையாவின் மனைவியிடம் 9 பேர் கொண்ட கும்பல் விசாரித்தனர். ஆனால் பாலையா மனைவி எனது கணவரை பற்றி எதும் தெரியவில்லை என்று கூறினார்.
இதனிடையே அந்த கும்பல் பாலையாவின் மாமனாரிடம் விசாரித்ததில் பெட்டி வாங்கியதை ஒப்புக்கொண்டார். அந்த பெட்டியை 9 பேர் கொண்ட கும்பல் கைப்பற்றியது. இதுபற்றி தே.புடையூர் கிராமத்தில் புதிய நபர்கள் சுற்றியதால் கிராம மக்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கோடி கணக்கில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். பிடிபட்ட கும்பலின் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாலையாவையும், தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாக கூறப்படுகிறது.
- அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரியை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவரது மகள் அருணா வயது 22 இவர் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடலூர் மாவட்டம் முட்டம் அருகே உள்ள அழிஞ்சி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் அவரது மகன் அரவிந்த் வயது 2019-ல் பிஎஸ்சி அக்ரி படிக்கும்போது இவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாகவும் பிறகு சில நாட்களாக தொலைபேசி துண்டித்து விட்டார் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர்.
- பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடலூர்:
பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த மின் நிறுத்தும் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்கு ப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிளும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துக் வித்தனர்.
- வேப்பூர் அருகே 500 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார்.
கடலூர்:
வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் ரேசனஅரிசி கடத்திசெல்வதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் குற்றப்பு லனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் கீழக்குறிச்சி கிராமத்திற்கு சென்றபோது பெரியசாமி என்பவரது வீட்டிற்கு அருகிலிருந்து மினிலாரியில் ரேசன் அரிசி கடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மங்களூர் பகுதியைச் சேர்ந்த பாலு (25), பெரியசாமி (38), காசிலிங்கம் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களி டமிருந்து 50 கிலோ எடை கொண்ட 10மூட்டையாக 500கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சிதம்பரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
- ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார்
கடலூர்:
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது மண் ரோடு பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார். இதேபோல் சிதம்பரம் அருகே சிவபுரி பஸ் நிறுத்தம் அருகில் நடுரோட்டில் வடகிரப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் இடைவிடாத ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சிதம்பரம் அருகே கடைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்.
- மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே வ..உசி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 18) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயலட்சுமி தாய் பொன்மணி சிதம்பரம் நகர தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது.
- பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் சுமன்ராஜ் (31)இவரது மனைவி சிவரஞ்சனி (30) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமண ம்நடந்தது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்தஜனவரி 13-ந் தேதி தனது கணவருடன் சண்டை போட்டு க்கொண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துஇறந்து போன சிவரஞ்சனி தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துபிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் கோட்டா ட்சியர்பண்ருட்டி துணை போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவரஞ்சனியின் கணவன் சுமன் ராஜை புது ப்பேட்டை போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும்.
- போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெரு சேர்ந்த பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றாவிட்டால் ரேசன் கார்டுகள் ஒப்படைக்கப்படும் என ஒப்படைப்பதற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் அரிய கோஷ்டி கிராமத்தில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு பயனாளி தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் தற்போது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற சில பயனாளிகளை நீக்கினர். இதன் காரணமாக பல வீடுகள் நிலுவையில் உள்ள நிலையில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பாக காணப்பட்டது.
- நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
- எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடலூர்:
இந்து முன்னணி கலை இயக்கிய மாநில தலைவர் நடிகர் கனல் கண்ணன் கைது செய்த தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த இந்து முன்னணி கலைந்து செல்லாததால் போலீசார் 20 பேரை கைது செய்து கடலூர் தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன கோஷம் எழுப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
- தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்கீழ் 13- ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர் . இத்திட்டம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவினை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பிறப்பித்து உள்ளார்.
- தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர்.
- முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் உள்ளது. நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கோவில் முன்பக்கம் கேட் உடைந்து, உண்டியல் உடைந்து திறந்திருந்தது. இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் சப்-ஜெயில் சாலையில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் முன்பக்கம் கேட் உடைந்து உண்டியல் உடைத்து திறந்திருந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில் உண்டியல் உடைந்து திறந்திருந்தன. இதனை இன்று காலை பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உடைந்திருந்த உண்டியலை பார்வையிட்டனர். மேலும் மூன்று கோவிலில் சுமார் 21/2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மையப் பகுதியான மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் மற்றும் சப்ஜெயில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் மர்ம ஆசாமிகள் துணிந்து கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் திருட முயற்சித்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் களில் உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 சம்பவங்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகர பகுதியான கடலூர் நகரத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்து வரும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில் உண்டியலில் உடைத்து திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும், செல்வதற்கும் சற்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது மட்டும் இன்றி போலீசாரிடம் தொடர் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என கேட்டபோது, தமிழகத்தில் தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், புதிதாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து உரிய முறை யில் விசாரணை நடத்தி னால் மட்டுமே எதிர்வர் காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் முழுமையாக தடுக்க முடியும்.
ஆனால் தற்போது சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கோ மற்றும் பிடித்து விசாரிப்பதற்கோ உரிய அனுமதி இல்லாததால் உடனுக்குடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என கூறினார். இதன் காரணமாக பொது மக்களின் அடிப்படை செயல்படுதல் முழுவதும் பாதிப்படைய நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீஸ் உயரதிகாரிகள் மேலோட்டமாக எந்த செயல்பாடுகளையும் யூகித்து உத்தரவு பிறப்பிக்காமல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
- பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ருட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் தற்போது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர் பகுதி பளிச்–சென காணப்படுகிறது. ஆனால் நத்தவெளி-சரவணாநகர் விரிவு பகுதி சாலை தற்போது போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் மற்றும் நடுத்தர மக்கள் ஏராள மானோர் வசித்து வருகி றார்கள்.
வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதி கரித்து வருகிறது. ஆனால் இந்த நகரின் பிரதான சாலையாக உள்ள நத்த வெளி-சரவணாநகர் விரிவு பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ரு–ட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் தடுமாறி வருகிறது. 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகி–றார்கள். எனவே மாநக–ராட்சி அதி–காரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இந்த விஷ–யத்தில் தனிக்கவனம் செலுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியு–றுத்தி உள்ளனர்.






