என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people caught"

    • துபாயில் பாலையா கட்டிட வேலை செய்து வந்தார்.
    • பாலையா மனைவி எனது கணவரை பற்றி எதும் தெரியவில்லை என்று கூறினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 38). இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு ஏஜென்சி நிறுவனம் கூறியபடி வேலை கிடைக்கவில்லை. துபாயில் பாலையா கட்டிடவேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள நிறுவனம் பாலையாவின் பாஸ்போட்டை பறிமுதல் செய்தது. ஆனால் கடந்த வாரம் துபாய் நிறுவனம் பாலையாவிடம் நீ ஊருக்கு செல்லவேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் பெட்டியை குறிப்பிட்ட நபரிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பிய பாலையா அந்த நிறுவனம் கொடுத்த பெட்டியுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடந்த 14-ந் தேதி வந்து இறங்கினார். அப்போது சுதந்திரதின விழாவை யொட்டி பயங்கர சோதனை நடந்தது. ஆனால் பாலையாவிடம் தெரிவித்த ஒரு நபர் அங்கு வரவில்லை. எனினும் பாலையா லாபகமாக தப்பி பெட்டியுடன் ஊருக்கு திரும்பினார். அப்போது தான் வைத்திருந்த பெட்டியை கருவேப்பிலங்குறிச்சி அருகே பேரலையூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கொடுத்தார். மேலும் ஊருக்கு திரும்பியதை சொல்ல வேண்டாம் என தெரிவித்தார்.

    இதனிடையே பாலையாவின் மனைவி திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் எனது கணவர் ஊருக்கு திரும்பியதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே துபாயில் இருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த கும்பலுக்கு பாலையா வேலை செய்த நிறுவனம் தொடர்பு கொண்டு பேசியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து 9 பேர் கொண்ட கும்பல் திருச்சி விமானநிலையத்துக்கு சென்றது. அப்போது பாலையா வந்த கார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அந்த டிரைவர் பேரலையூர் கிராமத்தில் பாலையாவை இறக்கி விட்டதாக தெரிவித்தனர். உடனே அந்த கும்பல் பேரலையூர் வந்தது. அங்குள்ள பாலையாவின் மாமனாரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த கும்பல் அவரை அழைத்துக்கொண்டு பாலையாவின் சொந்த ஊருக்கு சென்றனர். அங்கு பாலையாவின் மனைவியிடம் 9 பேர் கொண்ட கும்பல் விசாரித்தனர். ஆனால் பாலையா மனைவி எனது கணவரை பற்றி எதும் தெரியவில்லை என்று கூறினார்.

    இதனிடையே அந்த கும்பல் பாலையாவின் மாமனாரிடம் விசாரித்ததில் பெட்டி வாங்கியதை ஒப்புக்கொண்டார். அந்த பெட்டியை 9 பேர் கொண்ட கும்பல் கைப்பற்றியது. இதுபற்றி தே.புடையூர் கிராமத்தில் புதிய நபர்கள் சுற்றியதால் கிராம மக்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கோடி கணக்கில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். பிடிபட்ட கும்பலின் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாலையாவையும், தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×