என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
    • ராசிங்காபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரியில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் அருளானந்தபாபு(29). இவர் நேற்று முன்தினம் ஒரு மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார். இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுர த்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரி யில் சந்தேகப்படும்படியான சில நபர்கள் தங்கியிருப்பதாக போடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் இத்திரிஸ்கான் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அருளானந்தபாபு கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து முத்தழகு பட்டி மேற்குதெருவை சேர்ந்த ஞானமுத்து மகன் வெஸ்லின்அபிஷேக்(24), அய்யப்பன் மகன் சரத்கு மார்(24), சின்னாளபட்டி கருணாநிதிகாலனியை சேர்ந்த கைலாசம் மகன் ஆனந்த்(34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் குறித்து நகர்தெற்கு போலீசில் தொடர்பு கொண்டு போடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    • வேப்பூர் அருகே 500 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் ரேசனஅரிசி கடத்திசெல்வதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் குற்றப்பு லனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் கீழக்குறிச்சி கிராமத்திற்கு சென்றபோது பெரியசாமி என்பவரது வீட்டிற்கு அருகிலிருந்து மினிலாரியில் ரேசன் அரிசி கடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மங்களூர் பகுதியைச் சேர்ந்த பாலு (25), பெரியசாமி (38), காசிலிங்கம் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களி டமிருந்து 50 கிலோ எடை கொண்ட 10மூட்டையாக 500கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×