என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் வாலிபர் கொலை: தலைமறைவாக இருந்த 3 பேர் போடியில் கைது
- வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
- ராசிங்காபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரியில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் அருளானந்தபாபு(29). இவர் நேற்று முன்தினம் ஒரு மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார். இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுர த்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரி யில் சந்தேகப்படும்படியான சில நபர்கள் தங்கியிருப்பதாக போடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர் இத்திரிஸ்கான் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அருளானந்தபாபு கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து முத்தழகு பட்டி மேற்குதெருவை சேர்ந்த ஞானமுத்து மகன் வெஸ்லின்அபிஷேக்(24), அய்யப்பன் மகன் சரத்கு மார்(24), சின்னாளபட்டி கருணாநிதிகாலனியை சேர்ந்த கைலாசம் மகன் ஆனந்த்(34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் குறித்து நகர்தெற்கு போலீசில் தொடர்பு கொண்டு போடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.






