என் மலர்tooltip icon

    கடலூர்

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.

    இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.

    தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மளிகை கடை ஊழியர் பலியானார்.
    • மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது.

    கடலூர்:

    சென்னையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 18) இவருக்க தாய், தந்தை இல்லை. எனவே இவர் பண்ருட்டி அருகே கணிசப்பாக்கம் காலனியிலுள்ள தாய் மாமன் தரணிதரன் என்பவரது வீட்டில் தங்கி இருந்து பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கனி மார்க்கெட்டிலுள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல கடைக்கு வேலைக்கு செல்வதற்காக இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில்குளித்துவிட்டு வந்துள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது. அப்போது கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் கம்பத்தின் எர்த் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மோசஸ் பரிதாபமாக உயிரிந்தார். இது பற்றிதகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஏட்டு வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று மின்சாரம்தாக்கி உயிர் இழந்த மோசஸ் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி ஆனார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிட்டமல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 66). மீனவர். இவர் நேற்று மாலை வீரா ணம் ஏரியில் படகு மூலம் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் மீனவர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

    தகவல் அறிந்த காட்டு–மன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம் அருேக தீராத வயிற்றுவலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மனைவி ராஜலஷ்மி (வயது 35). இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்த விஷம்குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை யடுத்து இவரது தந்தை அரசப்பன் கிள்ளை போலீஸங நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலிடம் பெற்றுள்ள விபரங்களை உறுதி செய்வதற்காகவும் ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துகொள்ளலாம்.

    மேலும் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இந்திய கடவுச்சீட்டு, வங்கி அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கபட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும்.

    மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதியை தகுதியான நாளாக கொண்டு புதிய மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கையினை நடத்தி வருகிறது. இதனால் ஜனவரி 01-ம் தேதிக்கு பின்னர் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை காத்து இருந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வந்தனர். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜுலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய4 தகுதி தேதிகளை அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே மேற்படி தகுதி நாட்களில் 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது

    • கோகுலாஷ்டமி பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
    • குறைந்த அளவிலே கிருஷ்ணர் சிலை விற்பனை ஆகிய வருவதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    கடலூர்:

    ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் கோகுலாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் கம்சனை கொல்ல கிருஷ்ணர் அவதரித்த நாளை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாளை (19-ந்தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொது மக்கள் கிருஷ்ணர் சிலையை கொலு வைத்து நைவேத்யங்கள் படைத்து வழிபடுகின்றனர்.வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொலு வைத்து விரதம் இருந்து கூட்டுபஜனையுடன் வழிபாட்டை செய்து வருகின்றனர். இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களிலும் மற்றும் கடைகளிலும் அழகிய கண்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பக்தர்கள் அதனை விரும்பி வாங்கி செல்லும் வகையில் கண்ணை கவரும் கிருஷ்ணர் சிலைகள் விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர். தற்போது வழக்கத்தைவிட குறைந்த அளவிலே கிருஷ்ணர் சிலை விற்பனை ஆகிய வருவதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
    • சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • கிருத்திகா அதே பகுதியில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் காங்கேயன் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள பேர்பெரியான் குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளியில் இருந்து வகுப்பாசிரியர் மாணவி வீட்டுக்கு போன் செய்து கிருத்திகா ஏன் தேர்வு எழுத வரவில்லை என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து முத்தாண்டிகுப்பம் போலீசில் மாணவியின் தாயார் மங்கையர்கரசி புகார் கொடுத்தார். முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    • சந்திரபாபு கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
    • தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு(வயது40). இவர் கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல்போன சந்திரபாபுவை தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேல்வளி மண்டல சுழற்றி காரண மாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் பயிர் வகைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், நடுவீரப் பட்டு, பாலூர் ஆகிய பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் மண்ணில் சாய்ந்து உள்ளது. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • சுரேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த சயனைடை சாப்பிட்டார்.
    • வெற்றிச்செல்வன் அங்குள்ள கழிவறைக்கு சென்று பினாயிலை குடித்தார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், சிதம்பரத்தை சேர்ந்த சுரேஷ், புவனகிரியை சேர்ந்த அன்பு ஆகியோரை சிதம்பரம் டவுன் போலீசார் குற்ற வழக்கு தொடர்பாக சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று இரவு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது சுரேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த சயனைடை சாப்பிட்டார். உஷாரான போலீசார் அதை தட்டிவிட்டனர். அதே நேரத்தில் வெற்றிச்செல்வன் அங்குள்ள கழிவறைக்கு சென்று பினாயிலை குடித்தார்.

    சிறிது நேரத்தில் 2 பேருக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 5-வது தெருவை சேர்ந்தவர் யசோதை (வயது 65). இவர் இன்று குள்ளஞ்சாவடி செல்வதற்கு பண்ருட்டி பஸ் நிலையம் வந்தார். அங்கு மாம்பட்டு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார். அப்போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே யசோதை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    ×