என் மலர்
கடலூர்
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கிருஷ்ணன் குப்பம் சேர்ந்த 17 வயது கட்டியாங்குப்பம் அரசு பள்ளியில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி குள்ளஞ்சாவடி பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். இதனை தொடர்ந்து மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவி எங்கு சென்றார். கடத்தப்பட்டாரா? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கெடிலம் ஆறு பகுதியில் ஒரு கும்பல் சந்தேகம் படும்படியாக இருப்பதாக கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, குருமூர்த்தி, மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 5 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதில் கடலூர் குப்பன் குளம் சேர்ந்தவர்கள் ஜீவா (வயது 22), மதன்குமார் (18), நவீன்ராஜ் (வயது 20) மற்றும் புதுப்பாளையம் குப்பன் குளம் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பிரபல ரவுடி வீரா என்பவரை கொலை செய்த ஒரு கும்பலை கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு முன் விரோத தொடர்பாக கிருஷ்ணன் மனைவி காந்திமதி என்பவரை ஒரு கும்பல் கடந்த 2021 -ஆம் ஆண்டு கொலை செய்தனர். இந்த வழக்குகளில் ஜீவா, மதன் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி வீரா என்பவரின் தந்தை கனகராஜ் என்பவரை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட வீரா வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மீண்டும் இந்த கும்பல் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சக்தி என்பவரும் மேற்கண்ட கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைத்து திருட முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15 -ந் தேதி மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு ஸ்ரீ நாகம்மாள் கோவில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில், சப் ஜெயில் ரோடு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் கடலூர் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் , ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கும்தாமேடு தரைப்பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் கடலூரில் 4 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரிய வந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் சேர்ந்தவர் சக்தி (வயது 19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் . இந்த நிலையில் சக்தி என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் ரவிச்சந்திரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.
- கடலூர் அருகே லாரியில் கடத்தி சென்ற 1 டன் இரும்பு பறிமுதல் செய்யப்பட்டது.
- இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே சிந்தாமணிக் குப்பம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது 1 டன் இரும்பு இருந்தன. பின்னர் இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வாகனத்தில் இருந்த லாரியில் இருந்து நபர்கள் திடீரென்று தப்பி ஓடினார்கள். உஷாரான போலீசார் அவர்களை துரத்தினர். ஆனால் அவர்களை பிடிக்க சென்றபோது பிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8 மாத குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26) இவருக்கும் சுபஸ்ரீ என்பவருக்கும் கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 8 மாதம் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதன் காரணமாக விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த விஜய் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் இருந்த பெண் திடீரென்று மாயமானார்.
- அதிர்ச்சடைந்த அவர்கள் குடும்பத்தினர் அகிலரசியில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே புலியூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அகிலரசி. இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இந்த நிலையில் இவர்களுக்கு அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்த காரணத்தினால் கணவர் ரவிக்குமாரை பிரிந்து அகிலரசி தனது தாய் வீட்டில் ஒரு வருடமாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அகிலரசி வீட்டிற்கு மீண்டும் வரவில்லை. அதிர்ச்சடைந்த அவர்கள் குடும்பத்தினர் அகிலரசியில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர்.
- முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் இன்று காலை மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து ஓடினர் இதனை தொடர்ந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணத்தினால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பியை மீண்டும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாகனங்க ளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது . இதன் காரணமாக மிக முக்கியசாலையாக கருத ப்படும் பகுதியில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே தற்போது மின் கம்பிகள் பழுது ஏற்பட்டு தளர்ந்து உள்ளது . இது போன்ற தொடர்ச்சியாக மழை பெய்யும் சமயங்களில் மின்சாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு பகுதியாக உள்ள மின்கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து இது போன்ற மின்கம்பி அறுந்து விழும் நிகழ்வுகளை தவிர்க்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ம் பேரிடர் மாவட்டமாக உள்ளதால் எந்நேரத்திலும் மழை அதிகளவிலும், காற்று சூறாவளி காற்றா கவும் மாறக்கூடிய அவல நிலையில் உள்ள பகுதியாக இருப்பதினால் மின்சாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்கள் தொடங்கு வதற்கு முன்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் திடீரென்று மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
கடலூர்
விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டு களுக்கு முன் கும்பாபிஷேகம் காரணமாக திருப்பணி தொடங்கியதால், தற்காலிகமாக திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் பாரம்பரிய முறைப்படி, 7 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடக்கும் என கூறினர். ஆனால் அதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக 18 உபயதாரர்களை நியமித்து அவர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தீமிதி திருவிழா நடத்துவதற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்த மின்விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் ஆகி யவற்றை பொருத்திவிட்டு தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் 7 உபயதாரர்கள் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த வசந்தன் தரப்பினர் பூட்டின் மேல் மேலும் பூட்டை போட்டு கோவிலை பூட்டினர். இதனால் இருதப்புக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதுவரை இரு தரப்பினரும் கோவிலை திறக்க கூடாது என போலீசார் கூறினர். இதனை ஏற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், விஜயகுமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்
- பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சித்தேரிக்குப்பம் கிரா மத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சோனியா (வயது 34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷகீலா (30) என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலை யில், சம்பவத்தன்று இவர்க ளுக்குள் மீண்டும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷகிலா மற்றும் அவரது உறவினர்கள் கார்த்திக் (26), பாஞ்சாலை (50) ஆகியோர் சேர்ந்து சோனியாவை தகாதவார்த்தை களால் திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கார்த்திக், பாஞ்சாலை உள்பட 3 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி துணை போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- திலிப்குமாரின் உடலில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேடு பெரிய காலனியை சேர்ந்தவர் திலிப்குமார். இவர் பண்ருட்டி அருகே வல்லம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.
நேற்று கிருஷ்ணஜெயந்தி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள தோப்புக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் இரவு நேரமாகியும் திலிப்குமார் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் திலிப்குமாரை இரவு முழுவதும் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இன்று காலை அந்த பகுதியில் உள்ள சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் திலிப்குமார் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
இதனை வயலுக்கு சென்ற காவலாளி தீர்த்தமலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் ஊருக்குள் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டனர். திலிப்குமாரின் மனைவி மற்றும் மகன்கள் அங்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.
தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது திலிப்குமாரின் உடலில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து திலிப்குமாரின் மனைவி கூறுகையில், தனது கணவர் கழுத்தில் தங்க செயின் அணிந்திருந்ததாக தெரிவித்தார். அந்த நகை மாயமாகி இருந்தது. எனவே மர்மநபர்கள் திலிப்குமாரை கொலை செய்து நகையை பறித்து சென்றார்களா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
- கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஊருக்கு நடுவே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக இன்று காலை பூசாரி சபாபதி கோவிலுக்கு வந்தார். கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கீழிருப்பு கிராமத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்று வருவதால்குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கீழிருப்பு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென்று காணவில்லை.
- வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் உட்கோட்ட த்திற்குட்பட்ட பெண் காவலரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென்று காணவில்லை. மேலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்த போது போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் கடலூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது உறவினர்கள் உடந்தையுடன் பெண் காவலரின் மகளை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.






