என் மலர்tooltip icon

    கடலூர்

    • தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திக உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் முதுநகர் செம்மண்டலம், காராமணிக் குப்பம், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, தொழுதூர், வேப்பூர், கீழச்செருவாய், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,காட்டுமன்னார்கோயில் அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது காண முடிந்தது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு தொழுதூர் - 34.0, வேப்பூர் - 27.0, கீழச்செருவாய் - 25.0, லால்பேட்டை - 18.0, காட்டுமயிலூர் - 15.0,பரங்கிப்பேட்டை - 14.4, புவனகிரி - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, காட்டுமன்னார்கோயில் - 11.0, அண்ணாமலைநகர் - 10.0, பண்ருட்டி - 8.5, சிதம்பரம் - 7.4, கடலூர் - 5.8, கலெக்டர் அலுவலகம் - 5.4, கொத்தவாச்சேரி - 5.0, மீ-மாத்தூர் - 5.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 3.75, வானமாதேவி - 3.0,ஆக மொத்தம் 222.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .

    • காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது.
    • கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமம் உள்ளது. இன்று காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற மீனவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது பழங்காலத்து மரச்சிலையாக இருந்தது‌. மேலும் அந்த சிலை ஆங்கிலேயர் போலீஸ் மரசிலை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்ற 4 பேர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காடீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது‌. இன்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது பெரியக்காட்டுபாளையம் பகுதியில் திடீரென்று மின்சார தடை ஏற்பட்டு இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது கோவிலில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டு வந்ததால், சந்தேகம் வந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் கொண்ட கும்பல் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 4 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.இதனை தொடர்ந்து ரெட்டிச் சாவடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை கோட்டூர்புரம் சேர்ந்தவர்கள் கரண் (வயது 18), செல்வம் (வயது 24), சூரிய பிரகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றதாகவும், அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் அருகே 1 1/2 டன் இரும்பு பொருட்கள் கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • டிரைவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சாலக்கரை அருகே சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது 1 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தன. இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு டிரைவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரும்பு பொருட்கள் வாகனம் மற்றும் இரண்டு பேரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் தியாகவல்லி சேர்ந்த மூர்த்தி (வயது 22), பிரபாகரன் (வயது 33) ஆகிய இரண்டு பேரும் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    • இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கல்லூரி நகரில் உள்ள வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் நேரடியாகவும், இனையதளம் மூலமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அறிவித்திருந்தார்.
    • கடலூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மனு கொடுத்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி சித்சபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி சித்சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கு பொது தீட்சிதர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே கோவிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலைதுறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இந்த ஆய்வு கோர்ட்டு விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஆவணங்களை கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதனிடையே நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் நேரடியாகவும், இனையதளம் மூலமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி கடலூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மனு கொடுத்தனர்.

    இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள், சொத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது.

    அதன்படி இந்த குழுவில் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் ஜோதி (கடலூர்), குமரேசன் (திருவண்ணாமலை), சிவலிங்கம் (விழுப்புரம்), நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் தர்மராஜன் (திருச்சி), குமார் (திருவண்ணாமலை), குருமூர்த்தி (விழுப்புரம்) ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வு செய்யும் விபரம் குறித்து ஏற்கனவே கோவிலில் உளள தீட்சிதர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன்படி 6 பேர் கொண்ட குழுவினர் இன்று (22-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இந்த குழுவினர் இன்று காலை 10.30 மணி அளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பொது தீட்சிதர்கள் அலுவலக அறையில் அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அதன் பின்னர் 21 படிக்கு அருகே உள்ள இடத்தில் தீட்சிதர்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி.
    • 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார்.

    கடலுார்:

    வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயதுமாணவி. இவர், பள்ளிக்கு சென்ற போது, 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • ரேசன் கடை ஊழியர் கொலை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது57)இவர் பண்ருட்டி அடுத்த வல்லத்தில் ரேசன் கடையில் விற்பனையாளராக பணி யாற்றிவந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில்இருந்துள்ளார்.

    இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளி யில்சென்றவர்வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம் தேடினர். எங்கும்கிடைக்கா ததால் பண்ருட்டிபோலீசில்புகார்கொடுத்தனர்.இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ரா ஜன்என்பவரது கரும்பு தோட்டத்தில்இவரைபிணமாககிடப்பதைகண்டனர்.

    பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்குபிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர் பிணமாக கிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.இவரை எதற்காக யார் கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழை க்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது இதனால் இந்த கொலையில் அவரது உறவினர் யாருக்காவது தொடர்பு இருக்குமா? வேறு ஏதாவது தொடர்பு களால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்பது குறித்து போலீஸ் செய்து வருகின்றனர். இதுவரை இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

    திருமணம் செய்துவைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). திருமணம் ஆகாதவர். மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிற எப்படி உனக்கு திருமணம் செய்வது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் கோபித்துக் கொண்டு கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.

    இதனை அறிந்த உறவினர்கள் மணிகண்டனை மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் முதுநகரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயமானார்.
    • கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் மாலுமியார் பேட்டையை சேர்ந்தவர் தினகரன் (வயது 24).இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெல்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தினகரன் சம்பவத்தன்று மீண்டும் ஆந்திரா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தாய் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் வந்த கணவனை மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வசனாங்குப்பம் சேர்ந்தவர் வீராசாமி (வயது 58).விவசாயி. சம்பவத்ன்று குடித்துவிட்டு வீராசாமி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவி சுமதி குடிபோதையில் வந்த கணவர் வீராசாமியை திடீரென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீராசாமி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×