விருத்தாசலத்தில் துணிகரம் அரசு ஊழியர் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருத்தாசலத்தில் துணிகரம்  அரசு ஊழியர் வீட்டை  உடைத்து பணம் கொள்ளை
Published on

கடலூர்:

விருத்தாசலம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கல்லூரி நகரில் உள்ள வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com