என் மலர்
கடலூர்
- சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர்.
- மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது.
பண்ருட்டி, ஆக.25-
கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியைசேர்ந்தவர் திலீப் குமார் (வயது 57)இவர் பண்ருட்டி அருகே வல்லத்தில் உள்ள ரேசன் கடைவிற்பனையாளராக பணியாற்றிவந்தார்.விடுமுறை நாளான கடந்த 23-ந் தேதிவீட்டில்இருந்துள்ளார். அன்று இரவு7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில்சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம்தேடினர். எங்கும்கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தனர். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர். உடனே பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றிபண்ருட்டி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாககிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.சினிமா பட பாணியில்மிளகாய் பொடி தூவிஇவரை எதற்காக யார்?கொலை செய்தனர்என்பதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது. இதனால் இந்தகொலையில் அவரது உறவினர்யாருக்காவது தொடர்பு இருக்குமா?வேறு ஏதாவது தொடர்புகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணைசெய்து வந்தனர். அந்தப் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவைஆராய்ந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அரவிந்த் (24) என்பவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அரவிந்த் கூறினார். இதானல் போலீசாருக்க சந்தேகம் வலுத்தது. பின்னர் தனி இடத்தில் வைத்துவிசாரித்தனர்.விசாரணையில் ரேசன் கடை ஊழியர்திலிப் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். தனக்கு அடுத்த மாதம்திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக திலீப் குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். திலீப் குமார் ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவர் . அவரோடு நான் பலமுறை ஓரினசேர்க்கை ஈடுபட்டுள்ளேன். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளேன்.
திருமண செலவுக்கு பணம் கேட்டேன். இல்லை என்று சொல்லிவிட்டார். அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன். அவரிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்டுபோலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க அவரது உடம்பில் மிளகாய் பொடி தூவினேன். பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவரை தேடுவது போல நடித்தேன் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைதுசெய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து 2 பவுன் செயின், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ,கொலை செய்த போது அவன் உடுத்தி இருந்த ரத்தக றைபடிந்த அவனதுஉடைகளை போலீசார் பறிமுதல்செய்தனர். ரேசன் கடை ஊழியர் கொலை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டு தெரிவித்தார்
- மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வேப்பூா்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்ட பிரேத பரிசோதனை 14.7.2022 அன்று செய்யப்பட்டது
இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் 19.7.2022 அன்று மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்கவில்லை எனவும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது.
ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது 2 பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் 2 பிரேத பரிசோதனைகளையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி மருத்துவ குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என என உத்தரவிட்டது.
அதன்படி நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் ஆய்வு அறிக்கை முடிவுகளை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு அறிக்கைகளை ஸ்ரீமதியின் பெற்றோர் வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறியதாவது:-
கடந்த மாதம் 14-ந் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும், 19-ந் தேதி அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2-வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த மணிகொல்லை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 80). இவர் கடந்த 5-ந் தேதியன்று இரவு புதுச்சத்திரத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடிவேல் மகன் தனசேகர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் குழந்தை திருமணம் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் முன்பு மௌனமொழி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதிகா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பூங்குணம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
- குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம்ஊராட்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு20-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கே நேற்றுதிடீரென்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட குழந்தைகள் அலறிஅடித்து ஓடினர். குழந்தைகளின்புத்தகபை மீது பாம்பு புகுந்து ஓடியது. அங்கு இருந்தஅங்கன்வாடி மைய பொறுப்பாளர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அைழத்து சென்றார். குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அங்கன்வாடி மையத்தைஒட்டியுள்ளகுடியிருப்பில் மண்டி கிடக்கும் புதர்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
- கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை ஆகி வருவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தி உள்ளார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலூர் கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம், கம்மியம் பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சோதனையில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையானது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் எம். புதூர் சேர்ந்த ஏழுமலை (வயது 36), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் தீனா என்கின்ற தினகரன் (20) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி (19) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
- மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
கடலூர்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- சிதம்பரத்தை சேர்ந்த கொத்தனார் மாயமானார்.
- மனைவி இன்பநிலா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
சிதம்பரம் ஜகனானந்தா தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் கடந்த 9-ந் தேதி கொத்தனார் வேலைக்காக வெளியூர் சென்றார். அதன் பின்னர் அங்கு மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி இன்பநிலா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொத்தனார் வேலைக்கு சென்ற சங்கர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
- அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நாவலூர் கிராமத்தில் பழைய காலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி( 52) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டின் உள்புறம் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு உறங்கி உள்ளனர். வெளிப்புறம் மகன் மணிகண்டன் (31), மரு மகள் நிஷாந்தி ஆகியோர் உறங்கி உள்ளனர். நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக திறந்து வீட்டில் இருந்த சாம்சங் எல்.இ.டி. டி.வி. 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இன்று அதிகாலை நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசா ருக்கு தகவல்கொடுத்தார். தகவலின்பேரில் டி.எஸ்பி. காவியா நேரில் சென்று விசாரணை செய்தார். இதே போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகு தியில் இது போல் திருடர்கள் நடைபெறுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- சிதம்பரத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் உள்ள கூத்தன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் லஷ்மி நாராயண ரெட்டி (42) இவர் அதே பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கடையில் இரும்பு கம்பிகளை திருடிய 2 நபர்களை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
- மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத சிறுவன் நடந்து சென்றபோது திடீரென புதைக்குழியில் சிக்கினார்.
- புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்ட இளைஞர்கள் அவனுக்கு முதல் உதவி செய்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், 2-ம் சுரங்கம் அருகில் ஊமங்கலம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகே சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்துவிட்டு, மண்ணை மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 வயது சிறுவன் ஒருவன், மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத, அச்சிறுவன் நடந்து சென்ற போது, திடீரென புதைக்குழியில் சிக்கினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், அந்த பகுதியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில், சிறுவன் கத்தி கதறி கூச்சலிட்டு சோர்வடைந்து உள்ளான்.
அப்போது அந்த வழியாக வேலை பார்த்துவிட்டு, வீடு திரும்பிய நெய்வேலி அருகே ரோமாபுரி கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர்கள் புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை கண்டு சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்டு அவனுக்கு முதல் உதவி செய்தனர்.
பின்னர் அவனது வீடு எங்கு என்று விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இளைஞர்கள் சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே திருமாணிக்குழி வண்டிக்குப்பம் சேர்ந்தவர் சேகர் (வயது 50). காண்டிராக்டர். அவரது மனைவி குமுதம் சேகர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார்.
நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியில் சென்று இருந்தனர். பின்னர் சேகர் மற்றும் குடும்பத்தினர் சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததோடு பின்பக்கம் கதவு உடைந்து இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோவும் உடைந்து திறந்திருந்தது.
இதில் சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






