search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே ஓரின சேர்க்கையால் ரேசன் கடை  ஊழியர் கொலை-  பரபரப்பு தகவல்கள்
    X

    ரேசன் கடை ஊழியரை கொலை செய்த வாலிபர் அரவிந்தை போலீசார் கைது செய்தனர். 

    பண்ருட்டி அருகே ஓரின சேர்க்கையால் ரேசன் கடை ஊழியர் கொலை- பரபரப்பு தகவல்கள்

    • சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர்.
    • மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது.

    பண்ருட்டி, ஆக.25-

    கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியைசேர்ந்தவர் திலீப் குமார் (வயது 57)இவர் பண்ருட்டி அருகே வல்லத்தில் உள்ள ரேசன் கடைவிற்பனையாளராக பணியாற்றிவந்தார்.விடுமுறை நாளான கடந்த 23-ந் தேதிவீட்டில்இருந்துள்ளார். அன்று இரவு7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில்சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம்தேடினர். எங்கும்கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தனர். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர். உடனே பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றிபண்ருட்டி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாககிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.சினிமா பட பாணியில்மிளகாய் பொடி தூவிஇவரை எதற்காக யார்?கொலை செய்தனர்என்பதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது. இதனால் இந்தகொலையில் அவரது உறவினர்யாருக்காவது தொடர்பு இருக்குமா?வேறு ஏதாவது தொடர்புகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணைசெய்து வந்தனர். அந்தப் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவைஆராய்ந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அரவிந்த் (24) என்பவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அரவிந்த் கூறினார். இதானல் போலீசாருக்க சந்தேகம் வலுத்தது. பின்னர் தனி இடத்தில் வைத்துவிசாரித்தனர்.விசாரணையில் ரேசன் கடை ஊழியர்திலிப் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். தனக்கு அடுத்த மாதம்திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக திலீப் குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். திலீப் குமார் ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவர் . அவரோடு நான் பலமுறை ஓரினசேர்க்கை ஈடுபட்டுள்ளேன். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளேன்.

    திருமண செலவுக்கு பணம் கேட்டேன். இல்லை என்று சொல்லிவிட்டார். அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன். அவரிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்டுபோலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க அவரது உடம்பில் மிளகாய் பொடி தூவினேன். பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவரை தேடுவது போல நடித்தேன் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைதுசெய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து 2 பவுன் செயின், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ,கொலை செய்த போது அவன் உடுத்தி இருந்த ரத்தக றைபடிந்த அவனதுஉடைகளை போலீசார் பறிமுதல்செய்தனர். ரேசன் கடை ஊழியர் கொலை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டு தெரிவித்தார்

    Next Story
    ×