கடலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

கடலூர் அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
Published on

கடலூர்:

கடலூர் அருகே திருமாணிக்குழி வண்டிக்குப்பம் சேர்ந்தவர் சேகர் (வயது 50). காண்டிராக்டர். அவரது மனைவி குமுதம் சேகர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார்.

நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியில் சென்று இருந்தனர். பின்னர் சேகர் மற்றும் குடும்பத்தினர் சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததோடு பின்பக்கம் கதவு உடைந்து இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோவும் உடைந்து திறந்திருந்தது.

இதில் சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com