என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பண்ருட்டியில்  தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
  X

  பண்ருட்டியில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிருத்திகா அதே பகுதியில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் காங்கேயன் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள பேர்பெரியான் குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளியில் இருந்து வகுப்பாசிரியர் மாணவி வீட்டுக்கு போன் செய்து கிருத்திகா ஏன் தேர்வு எழுத வரவில்லை என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து முத்தாண்டிகுப்பம் போலீசில் மாணவியின் தாயார் மங்கையர்கரசி புகார் கொடுத்தார். முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×