சிதம்பரம் அருேக விஷம் குடித்து பெண் தற்கொலை

சிதம்பரம் அருேக தீராத வயிற்றுவலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம் அருேக  விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கடலூர்:

சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மனைவி ராஜலஷ்மி (வயது 35). இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்த விஷம்குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை யடுத்து இவரது தந்தை அரசப்பன் கிள்ளை போலீஸங நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com