என் மலர்
கடலூர்
- பண்ருட்டியில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- சரண்யா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டி.எஸ்.பி., ஆகியோர் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போதுபண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்ட சூரக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெரு பழனி என்பவரது மனைவி இந்திரா (55)என்பவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
- கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.
- பவித்ரா கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார்.
- வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை.
கடலூர்:
சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இரண்டா மாண்டு பி.ஏ., படித்து வருகிறார்.
இவர் நேற்று கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை வீட்டிலியே இருக்க சொல்லிவிட்டு அவரது தாயார் கடைக்கு சென்றார். வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் பலனில்லை. இதையடுத்து இவரது தாயார் விஜியலட்சுமி (வயது 50) புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி சேர்ந்தவர் மாலதி (வயது 36) .இவர் மாளிகை மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடலூர் பி.என்.பாளையம் சேர்ந்த தணிகாசலம் (வயது 38). பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி பெற்றார்.இதை தொடர்ந்து 2 பேரும் மொபைலில் பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் மாலதியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தணிகாசலம் தானாக முன்வந்து பல உதவிகள் மாலதிக்கு செய்து வந்தார். ஆனால் தணிகாசலத்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் பேசுவதை மாலதி நிறுத்தி விட்டார்.
சம்பவத்தன்று மாலதி தனது இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தணிகாசலம் மாலதியை வழிமறித்து அவரது செல்போனை பறித்து யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாலதி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் தணிகாசலம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பூர் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா விசாரணை நடத்தினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே போ. கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் ஆதரவற்ற பெண் குழந்தையை எடுத்து சுபாஷினி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுபாஷி னிக்கும் தனது மகன் கோபிநாத்திற்கும் திருமணம் செய்து வைத்தார். இந்நிலை யில் சுபாஷினி கடுமை யான வயிற்று வலி காரண மாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா விசாரணை நடத்தி னார். அப்போது சுபாஷினி யின் அத்தை பரிமளா சுபாஷினி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்து போன சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வேப்பூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் சார் ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூார்:
மேல்புவனகிரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சின்னராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா (25), இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மேல்புவனகிரியில் உள்ள தில்லை வெள்ளாற்றங்கரை அருகே உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.
கடலூர்:
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டிஎஸ்பி, ஆகியோர் உத்தரவின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவத்தூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து.உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் (எ) தேவவிரதன் என்பது தெரியவந்தது. அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வன்னியர்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது பள்ளி மாணவி நேற்று இரவு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தந்தை பள்ளி மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமடைந்த மாணவி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் ெதாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலியானார்.
- அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சத்திய நாராயணன் (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு, கோ.பூவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சத்திய நாராயணன் தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை யில் இருந்து விருத்தாச்ச லம் நோக்கி வந்த அரசுப் பஸ், சத்திய நாராயணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துப்போனார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் அந்த பஸ்சை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்தியநாராயணனின் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
- ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன.
கடலூர்:
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்தன. கார்த்திகை மாதத்தில் தீப திருநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி வீடுகள், கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு. இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாள் வருகிற 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம், மஞ்சகுப்பம், செம்மண்டலம், திருப்பாதி ரிப்புலியூர் மற்றும் சன்னதி தெரு, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கடைகளிலும் வைத்து அகல் விளக்குகள் விற்கப்படுகிறது. சாலை ஓரங்களில் வியாபாரிகள் அகல் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் அகல் விளக்குகள் தயாரி க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தயாராகும் அகல் விளக்குகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''கார்த்திகை தீப திருவிழாவுக்கு தற்போது அகல்விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளது பெரிய வியாபாரிகளிடம் சிறு வியாபாரிகள் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் அளவுக்கு தகுந்தாற்போல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதே அகல் விளக்குகள் தற்போது ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதனையும் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தீப திருநாளுக்கு முந்தைய நாட்களில் அகல்விளக்கு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
- கடலூர் அருகே பெண்ணை மாணபங்கம் படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார்.
கடலூர்:
கடலூரை அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குப்பை யைக் கொட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார். அப்போது ராஜேந்திரன் கமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் கமலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
- கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
- இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்
கடலூர்:
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு நேற்று தனியார் பஸ்சை செஞ்சியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவர் பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிப்பர் லாரி பிரேக் அடித்ததால் பின்னால் வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழுந்து பலத்த சத்தத்துடன் லாரி மீது மோதி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்து பஸ்ஸில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் முருகேசன் (வயது 50) கலைவாணி (வயது 36) சுகுணா (வயது 20) மாரியம்மாள் (33), மணிமாறன் (50), பிருந்தாவதி (65), மோகன் (39), விஜயலட்சுமி (49), சக்திவேல் (47), ராஜேந்திரன் (58), பார்த்திபன் (35), முருகானந்தம் (42), தாயம்மாள் (40) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






