என் மலர்
கடலூர்
- அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர்.
கடலூர்:
கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர். அப்போது அங்கு வந்த மகாலட்சுமி இதனை தட்டி கேட்டபோது, அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயம் அடைந்த மகாலட்சுமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மகாலட்சுமி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சமூர்த்தி, பாண்டியன், சிவக்கொழுந்து ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
- பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.
கடலூர்:
பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இப்பணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லியோ மற்றும் பீட் ஆகிய மோப்ப நாய்களுடன் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருவதோடு, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அந்தந்த ெரயில் நிலையங்களில் ெரயில்வே போலீசார் வெடிகுண்டு கருவிகள் கொண்டு ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.
- தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 10 தாலுக்காவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 10 தாலுக்காவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத ஆயிரக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் 12 ஆயிரத்து 510 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்.
இன்று காலை 9.30 மணிக்குள் வருகை தந்த தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிந்தது இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
- பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.
எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார்.
- 2 வாலிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.
கடலூர்:
விருத்தாச்சலம் பஸ் நிலையம் அருகே ஜங்ஷன் ரோட்டில் நேற்று இரவு 4 வாலிபர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு பொது மக்களுக்கு இடையூறாக நின்று பேசிக் கொண்டிருந்த 4 வாலிபர்களிடம் சென்று விசாரணை செய்தார். ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் போலீஸ் ஏட்டு என்று கூட பாராமல் செல்வராஜை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயமடைந்த செல்வராஜ் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்க ளில் 2 வா லிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். விசாரணை செய்ததில் தர்மபுரியைச் சேர்ந்த அன்பு (வயது 22) மணி (20) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோட 2 வாலிபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகில் பூவிற்கு என தனியாக பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது. இங்கு மல்லிகை, அரும்பு, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜப்பூ, கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற பல்வேறு பூக்கள் சில்லரையிலும், கட்டியும் விற்கப்படுகிறது.வேலை நிமித்தமாக கடலூருக்கு வரும் அனைவருமே இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வர்.
இதுதவிர, கடலூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பூக்கடை வைத்திருப்பவர்களும் இங்கு வந்து பூவை வாங்கி சென்று கட்டி விற்பனை செய்வார்கள்.
குறிப்பாக கனகாம்பரம், காக்கட்டான், ரோஜாப்பூ, அரும்பு, மல்லிகை வகைகள் என பல்வேறு வகையான பூக்கள் தேனி, கம்பம், மதுரை, கர்னாடகா போன்ற பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தே வருகிறது. கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற சிலவகை பூக்கள் மட்டுமே கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது.
கடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி போன்ற உணவிற்கான விவசாய பயிர்கள் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது.
விவசாயிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பூ போன்ற மாற்று விவசாயத்தில் ஈடுபடுகின்னர். இதனால் அனைத்து வகையான பூக்களுமே வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தே வாங்கி விற்கப்படுகிறது.
இன்று காலை பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது. அதாவது நேற்று வரை
கடலூர்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் 8 கிராம் தங்கபதக்கமும், 1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்
குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டு ம். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது பெற்ற வருடம் தெரிவிக்க வேண்டும். சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்கள் மற்றும் விரிவான அறிக்கை தெரிவிக்க வேண்டும். சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.
சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துரு க்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடு த்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
கடலூ ர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருேக முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்மணி()இவரதுமனைவி ஐஸ்வர்யா (வயது. 23), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இன்றுஅதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுஉடனே108ஆம்புலன்ஸ்க்குபோன் செய்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் திரிசங்கு, மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோ ர்விரைந்து சென்றுஐஸ்வர்யாவை கடலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து ச்சென்றனர்.
கடலூ ர்செல்லும்வழியில் அவர்பிரசவ வலி யால் துடித்தார்.சிறிது நேரத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும்கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காகசேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவில் சூப்பர்மார்க்கெட் உள்ளது .இங்கு வந்த டிப்டாப் சாமி ஒருவன்,தான் முதியோர்காப்பகம் நடத்துவதாக கூறி ஒரு பிட் நோட்டீசுடன் கடைக்குள் புகுந்தான். .அங்கிருந்த பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.
பின்னர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ளமற்றொருகடையிலும் கைவரிசை காட்டி விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்துள்ளான்.
இது குறித்து பண்ருட்டி போலீசர் விசாரித்து வருகிறார்கள்.
- இடியும் நிலையில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- புதிய பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருமூலஸ்தானம் மற்றும் இடையார் பகுதிகளை இணைக்கும் வகையில் ராஜன் வாய்க்கால் மீது மிகவும் பழமையான பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த பாலத்தின் வழியாக இடையார், பிள்ளையார்தாங்கல், அதங்குடி, ஆழங்காத்தான், வாண்டியார்இருப்பு, புளியங்குடி, வெள்ளூர், வெச்சூர், வெண்ணையார் போன்ற 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு வந்து செல்லவேண்டும். இடியும் நிலையில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியபாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டுமான பணி துவங்கப்பட்டது. பழைய பாலத்தை இடிப்பதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் காட்டுமன்னார்கோவிலுக்கும் செல்ல தற்காலிக தரைப்பாலம் வாய்க்காலில் அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக தரைப்பாலத்தின் வழியாகத்தான் மேற்சொன்ன கிராமங்ளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காட்டுமன்னா ர்கோவிலுக்கு கல்வி பயில வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கும் இவ்வழியாகத்தான் இப்பகுதி மக்கள் வரவேண்டும். புதிய பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்காலிக தரைப்பாலம் இன்று காலை உடைந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் 3-வது முறையாக தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. இதனால் மேற்சொன்ன 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் செல்லவேண்டும் என்றால் சுமார் 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியுற்றனர். தரமற்ற முறையில் தற்காலிக பாலம் அமைப்பதால் தான் அடிக்கடி உடைவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் புதிய பாலத்தை கட்டி வரும் ஒப்பந்ததாரரை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தற்காலிக தரைப்பாலத்தை தரமாக அமைத்து தரவேண்டும். புதிய பாலத்தை விரைந்து கட்டவேண்டுமென பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு புதிய பாலம் கட்டும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். அதுவரை மாணவர்கள், தொழிலா ளர்கள், நோயாளிகள் காட்டுமன்னார்கோவில் சென்று வர தற்காலிக தரைப்பாலத்தை தரமாக அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது.
கடலூர்:
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் 5 -ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதி நோக்கி இரண்டாவது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளகாடானது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு மேல்ப ட்டாம்பாக்கம் திருவந்திபுரம் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழையால் மழையில் நனைந்தபடியும், குடைப்பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- தொழுதூர் - 9.0, பரங்கிப்பேட்டை - 2.0, சிதம்பரம் - 1.4, கடலூர் - 1.1, அண்ணாமலைநகர் - 1.0 என மொத்தம் - 14.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது
- அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார்.
- இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி(வயது56) . இவர் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று கழுதூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார். மேலும் மீண்டும் சரியாகி விட்டது என்று கூறி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அப்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை அறிந்த கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேப்பூா் போலீசார் இறந்த ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






